districts

img

பல் குத்தும் குச்சியால் கலைப்பொருட்கள்

 திருவள்ளூர், டிச 23- திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அருகே உள்ள நடுகூர்மாதாக்குப்பம் எனும் கிராமத்தில் வசிப்பவர் ஆரோக்கியராஜ். மீன்பிடி தொழில் செய்துவரும் இவரது மூத்த மகன் பினோ ஷாஜன். கல்லூரியில் பட்டப் படிப்பு படித்த இவர் பொழுது போக்காக ஆரம்பித்தது தான் பல் குத்தும் குச்சியில் கலைப்பொருட்களை வடிவமைப்பது. நாளடைவில் இது  சாதனையாகும் என்று  நினைக்காமல் கலைப் பொருட்களான கப்பல், தாஜ்மஹால், குதுப்பினார், லண்டன் மேம்பாலம், லைட் ஹவுஸ் உள்ளிட்ட ஏராள மான வடிவங்களை உரு வாக்கியுள்ளார். இவரது திறமையால் உருவான இந்த பொருட்களை கண்டு  கிராம மக்கள் அவரை உற்சா கப்படுத்த, இரவு பகலாக கடினமாக உழைத்து 50க்கும் மேற்பட்ட கலைப் பொருட் களை உருவாக்கினார். பழவேற்காடு  கலங்கறை விளக்கம் அருகே இது குறித்த கண்காட்சி ஒன்றை நண்பர்கள் உதவி யுடன் அமைத்தார். பழ வேற்காடு பகுதிக்கு சுற்றுலா  வரும் சுற்றுலா பயணிகள் இதனைக் கண்டு அவரை  வெகுவாக பாராட்டி வரு கின்றனர்.ஆசியாவிலேயே பல் குத்தும் குச்சியால் இப்படி கலை பொருட்களை உருவாக்கியது இவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதனை அறிந்து பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திர சேகர் நேரடியாக கண்காட்சி நடக்கும் இடத்திற்கு வந்து கண்காட்சியை துவக்கி வைத்து இளைஞரின் சாதனைகளை பாராட்டி கவுரவப்படுத்தினார்.இந்த நிகழ்வில் பழவேற்காடு சுற்றுவட்டார மீனவ கிராம நிர்வாகிகளும் பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்த வர்களும் அவரது உறவினர் களும் கலந்து கொண்டனர்.

;