பாக்ஸ்கான் பெண் தொழிலாளர்களையும், சிஐடியு, வாலிபர், மாணவர் சங்க தலைவர்களையும் தடிகொண்டு தாக்கி, பொய் வழக்கில் கைது செய்த செங்கல்பட்டு எஸ்.பி.அரவிந்தன் மீது நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் எதிரில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் வி.தமிழரசி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வாலிபர் சங்கத்தின் மாநில பொருளாளர் தீபா, மாவட்டச் செயலாளர் க.புருஷோத்தமன், மாவட்ட பொருளாளர் சதீஷ், மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் எஸ்.கலையரசி, நிர்வாகிகள் மு.பிரியங்கா, மாணவர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகி.சுந்தர், உள்ளிட்ட பலர் பங்கேற்று உரையாற்றினர்.