பரந்தூர் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான நிலஆர்ஜிதம் வெளிப்படையாக நடைபெறவேண்டும், பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக அதிகபட்ச இழப்பீடு வழங்கவேண்டும், தேவைப்படுவோருக்கு மாற்றுஇடம் வழங்க வேண்டும் என்ற மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட்கட்சியின் நிலைப்பாட்டை பரந்தூர் கிராம பொதுமக்களிடம் விளக்கி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரச்சாரம் செய்தது. இதில் மாநிலக்குழு உறுப்பினர் இ.முத்துக்குமார், கட்சியின் மாவட்ட செயலாளர் சி.சங்கர், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.நேரு, பி.ரமேஷ், ஆர்.சௌந்தரி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் வி.சிவப்பிரகாசம், புவனேஸ்வரி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.