சென்னை, செப்.15- விமானப்படை வீரர் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். ஆவடி விமான படை தளத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த குஜராத் மாநிலம், கொடினூர் மாவட்டத்தை சேர்ந்த நீரோ பாய் சவுகான் (22) விமானப்படை வீரர். இவர் கடந்த 21ஆம் ஆண்டு பயிற்சியை முடித்து விட்டு, ஆவடி ஐ.ஏ.எப்.,ல் பணியாற்றி வந்தார். புதனன்று மாலை ஐ.ஏ.எப்.,மெயின் கேட்டில் பணிபுரிந்து கொண்டிருக்கும்போது, அவர் பாதுகாப்பிற்காககையில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து திடீரென தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து வந்த ஆவடி முத்தா பேட்டை காவல்துறையினர், இவரது உடலை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரித்துவருகின்றனர்.