சென்னை,ஜூலை 10-
திங்கள் முதல் கூடுதலாக சென்னை-மதுரை இடையே 2 விமான சேவைகளும், மதுரை-சென்னை இடையே 2 விமான சேவைகளும் அதிகரித்துள்ளது.
இதைப்போல் சென்னை -கொச்சி இடையே இருந்த 8 விமான சேவைகள் 10 விமான சேவையாக அதி கரிக்கப்பட்டுள்ளது.
கோவாவிலிருந்து சென்னை வருவதற்கும் தின மும் 2 விமான சேவைகள் இருந்தன. தற்போது சுற்று லாப் பயணிகள் வருகை அதிகரிக்க தொடங்கியதை அடுத்து நாள்தோறும் மதி யம் 1:50 மணிக்கு சென்னை யில் இருந்து கோவாவுக்கு கூடுதலாக ஒரு விமான சேவையும், மாலை 6:55 மணிக்கு கோவாவில் இருந்து சென்னைக்கு அந்த விமானம் திரும்பி வரு கிறது. இதனால் சென்னை-கோவா இடையே விமான சேவை 6 ஆக உயர்ந் துள்ளது.