districts

img

என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி ஆட்சியில் பல கோடி ரூபாய் ஊழல் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி குற்றச்சாட்டு

புதுச்சேரி, நவ.21- புதுச்சேரி பேருந்து நிலையம்- அடுக்குமாடி குடியிருப்பு  கட்டுமான பணியில் என் ஆர் காங்கிரஸ்- பாஜக கூட்டணி ஆட்சியில் பலகோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது: புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணியின் மூன்றாண்டு கால ஆட்சியில் பொதுப்பணித்துறையில் விஞ்ஞான ரீதியாக ஊழல் நடந்து வருகிறது. நான் முதலமைச்சராக இருந்தபோது ரூ.1,800 கோடி யில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் 64 பணி களுக்காக தொடங்கப்பட்டது. இது படிப்படியாக ரூ.700 கோடிக்கு குறைந்துள்ளது.  பேருந்து நிலைய கட்டுமானத்தில் ஊழல் புதுச்சேரி பேருந்து நிலையம் புனரமைக்க ரூ.15 கோடியில் திட்ட மிடப்பட்டது. அதன் பிறகு அடுக்கு மாடி கடைகளுடன் பேருந்து நிலையம் சீரமைக்க ரூ.47 கோடிக்கு மதிப்பீடு செய்யப்பட்டது. அடுக்கு மாடி கடையை கைவிட்டு,  தரை தளத்துடன் கடைகளுடன் ரூ.29 கோடிக்கு டெண்டர் விடப்பட்டது.  இதற்கான பணிகளை சென்னை சில்க்ஸ் நிறுவனம் துணை ஒப்பந்தம் எடுத்து செய்கின்றனர். 4 ஏக்கர் பரப்பளவு கொண்டு புதிய பேருந்து நிலையத்தில் 31 கடை, ஒரு உணவகம், முன்பதிவு அலுவலகம்,  வாகன நிறுத்துமிடம் ஆகியவற்றை கட்டும் பணி நடக்கிறது. இந்த பணி களை யார் ஆய்வு செய்தால் ரூ.15 கோடிக்குள் செய்து  முடித்து விடலாம் என்று தான் கூறுவார்கள். இதில் மட்டும் ரூ.14 கோடி ஊழல் நடந்துள்ளது. அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதில் முறைகேடு காங்கிரஸ் ஆட்சியில்  வாழைக் குளத்தில் 219 பேருக்கு அடுக்குமாடி குடியிருப்பு 370 சதுர அடியில் கட்டி கொடுத்தோம். ஒரு வீடு கட்ட ரூ.9.6 லட்சம் என ரூ.20  கோடி செலவானது. குமரகுரு பள்ளத்தில் புதிய முறையில் 220 அடுக்கு மாடி குடியிருப்பு கட்ட ரூ.45.5 கோடிக்கு டெண்டர் விட்டுள்ளனர். 12  மாடி கட்டிடத்தை சிலாப் முறையில் கட்டு கின்றனர்.  ஒரு வீடு கட்ட ரூ.21.50 லட்சம் செலவாகியுள்ளது. புதிய தொழில்நுட்பத்தில் வீடு  கட்டி னால் கட்டுமான தொகை குறைய வேண்டும். ஆனால் இங்கு  கூடி யுள்ளது. அதிகபட்சம் ரூ.30 கோடியில் கட்டுமான பணியை  முடித்திருக்கலாம். அதில் ரூ.15 கோடி ஊழல் நடந்துள்ளது. முதல்வர் பதவி விலகுவாரா?  பாதாள சாக்கடை சீரமைப்புக்கு ரூ.50 கோடி நிதி ஒதுக்கியுள்ளனர். இதை கேமரா மூலம் சாக்கடையை கண்காணித்து அடைப்புகளை அகற்றி  சீரமைப்பார்களாம். இதற்கு ரூ.50 கோடி என்றால் யாராவது நம்புவார்களா, அமைதியான முறை யில் ஊழல் தொடர்கிறது. இந்த  ஊழல்களுக்கு பொறுப்பேற்று முதல மைச்சர், அமைச்சர்கள் ராஜினாமா செய்வார்களா? இவ்வாறு நாராயணசாமி கூறினார். முன்னதாக முன்னாள் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம்  பேருந்து நிலையம் கட்டுமான முறைகேடுகளை குறித்து புகைப்படத்தை காண்பித்தார்.

அதானியிடம் புதுச்சேரியை  தாரைவார்க்க திட்டம்

அதானியிடம் புதுச்சேரியை  தாரைவார்க்க திட்டம் காரைக்கால் துறைமுகத்தை ஏற்கெனவே அதானிக்கு அரசு தாரை வார்த்து விட்டது. இப்போது மின்துறையை தாரைவார்க்க அனைத்து நடவடிக்கையும் முடிந்துவிட்டது. மின்துறை நஷ்டத்தில் இயங்குவதாக அமைச்சர் கூறி வருகிறார்.  நகராட்சி, கொம்யூன், தனியார்  நிறுவனத்தினர் தரவேண்டிய மின் கட்டண நிலுவை பாக்கி மட்டும் 8 விழுக்காடு உள்ளது. இதை வசூலித்தாலே நஷ்டம் இருக்காது. தற்போது நீதிமன்றத்தில் தொழிலாளர்கள்  தனியார் மையத்தை எதிர்த்து வழக்கு தொடுத்துள்ளனர். இவ்வழக்கில் அரசு தடையாணை பெற்றுவிட்டு, தனியாருக்கு தாரைவாக்க டெண்டருக்கு கால அவகாசம் கேட்டுள்ளார். எனவே ரூ.20 ஆயிரம் கோடி மதிப்புள்ள புதுச்சேரி அரசின் மின் துறையை  அதானி குழுமத்திடம விற்பதற்கு முயற்சிகள் மேற்கொண்டனர். ஒட்டுமொத்தமாக புதுச்சேரியை அதானி குழுமத்திடமே தாரைவார்க்க என்.ஆர்.காங்கிரஸ், பாஜக அரசு திட்டமிட்டுள்ளது.