தமிழ்நாடு சிறுபான்மை நலக்குழு சார்பில் சோழவரம் ஒன்றியம், நல்லூர் ஊராட்சியில் உள்ள காந்தி சிலைக்கு வியாழனன்று (ஜன.30) மாலை அணிவித்து தீவிரவாதத்திற்கு எதிரான உறுதிமொழி எடுக்கப்பட்டது. இதில் மாவட்ட பொருளாளர் ப.நடேசன் தலைமை தாங்கினார். விதொச மாவட்ட செயலாளர் அ.து.கோதண்டன், சிஐடியு மாவட்ட நிர்வாகி எம்.சந்திரசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.