திருவள்ளூர், டிச 4- காட்டுப்பள்ளி முதல் காமராஜர் துறைமுகம் வரையில் உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி சிஐடியு சார்பில் வெள்ளி யன்று (டிச. 3) சாலை மறியல் நடைபெற்றது. மீஞ்சூர் அருகில் உள்ள காட்டுப்பள்ளி முதல் காமராஜர் துறை முகம் வரை கடந்த 20 ஆண்டுகளாக சாலை பராமரிப்பின்றி உள்ளது. இதனால் 100 அடி சாலை முழுவதும் 4.5கி.மீ நீளத்திற்கு பள்ளம், படு குழியாக உள்ளதால் இரண்டு சக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாத நிலை உள்ளது. எல் அண்டு டி கப்பல் கட்டும் தொழில், அதானி துறைமுகம், அப்பல்லோ கண்டைனர், சென்னை மெட்ரோ வாட்டர் என பல கம்பெனிகள் உள்ளன. இதில் நூற்றுக்கணக்கான தொழி லாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த சாலையில் தினமும் நூற்றுக்கு மேற்பட்ட கண்டைனர் லாரிகள் சென்று வருகின்றன. சாலைகள் உரிய முறை யில் பராமரிக்காததால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. இந்த சாலையை யார் பராமரிப்பது என்பது குறித்து அரசு அதிகாரிகளுக்கு குழப்பம் உள்ளதாக கூறப்படுகிறது.
மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவோம் என்று கூறிக்கொள்ளும் அதானி, எல் அண்டு டி ஆகிய பெரும் நிறுவனங்கள் மருத்துவமனை,கல்விக்கூடங்கள், பொதுமக்கள் குடியிருக்கும் வீடுக ளுக்கு செல்லும் 4.5 கி.மீ சாலையை சீரமைக்க இதுநாள் வரை முன்வர வில்லை. இந்த நிலையில் காட்டுப் பள்ளியில் வசிக்கும் தொழிலாளர்கள் சிஐடியு தலைமையில் மாவட்ட குழு உறுப்பினர் ஜி.காஞ்சனா, சிபிசிஎல் ராஜேஷ் ஆகியோர் தலைமையில் எல் அண்டு டி காட்டுப்பள்ளி சந்திப்பில் மறியல் நடைபெற்றது. இந்த தகவல் அறிந்த மீஞ்சூர் ஒன்றிய பெருந்தலைவர் ஜி.ரவி, பொன்னேரி வட்டாட்சியர் மணிகண்டன், பொன்னேரி டிஎஸ்பி குணசேகரன், மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ராமகிருஷ்ணன், காட்டுப்பள்ளி ஊராட்சிமன்றத் தலைவர் எ.சேதுராமன் ஆகியோர் சிஐடியு மாவட்டத் தலைவர் கே.விஜயன், ஜி.விநாயகமூர்த்தி, எஸ்.நரேஷ் குமார், ஜி.சுசிலியா, எம்.நாகம்மாள் ஆகியோருடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.அதில் வருகின்ற டிசம்பர் 6 அன்று பொன்னேரி யில் கோட்டாட்சியர் முன்னிலையில் அதானி, எல் அண்டு டி நிர்வாகங்க ளையும் அழைத்து சாலையை விரைவாக போடுவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்று உறுதியளித்தனர் இதனடிப்படையில் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்.