மறைமலைநகர், மே 25-
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சிக்குட்பட்ட அதியமான் தெருவில் செவ்வாயன்று மறைமலைநகர் நகராட்சி தூய்மை பணியாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது அந்த தெருவில் உள்ள பூட்டப்பட்டிருந்த வீட்டின் சுற்றுச்சுவருக்குள் இருந்து குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. இதனையடுத்து அங்கு தூய்மை பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த பணியாளர்கள் சென்று பார்த்த போது அங்கு பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தை பசியால் அழுது கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக தூய்மை பணியாளர்கள் மறைமலைநகர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மறைமலைநகர் போலீசார் பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தையை மீட்டு மறைமலைநகரில் உள்ள சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்று குழந்தைக்கு முதலுதவி சிகிச்சைகளை அளித்தனர்.