districts

img

நிரந்தரப் பணிகளில் ஒப்பந்த முறையை கைவிட வேண்டும்

சென்னை, செப். 11 - நிரந்தர தன்மை வாய்ந்த பணிகளில் ஒப்பந்த முறையை கைவிட வேண்டும் என்று சிஐடியு மத்திய சென்னை மாவட்ட வலியுறுத்தியுள்ளது. சிஐடியு மத்திய சென்னை மாவட்ட முதல் மாநாடு செப்டம்பர் 10, 11 ஆகிய தேதிகளில் அரும்பாக்கத்தில்  ம.சிங்காரவேலர் திடலில் நடை பெற்றது.
தீர்மானங்கள்
மின்கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும், மின்சார திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும், போக்குவரத்து தொழிலாளர்களுக்கான நீதிமன்ற தீர்ப்புகளை அமல்படுத்த வேண்டும், டாஸ்மாக் ஊழியர்க ளுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரிய தொழிலாளர்களை முன்களப் பணியாளர்களாக அறிவிக்க வேண்டும், சுமைப்பணி, சலவை தொழி லாளர்களின் வாழ்வா தாரத்தை பாதுகாக்க வேண்டும். துறைமுகங்கள், சரக்கு முனையங்களை தனி யார்மயமாக்குவதை கைவிட வேண்டும், ஆட்டோ கட்டணத்தை உயர்த்துவ தோடு, அரசே ஆட்டோ செய லியை உருவாக்கி செயல் படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. மாநாட்டை வாழ்த்தி சிஐடியு மாவட்டச் செயலாளர் கள் பா.பாலகிருஷ்ணன் (தென்சென்னை), எஸ்.லெனின்சுந்தர் (வட சென்னை) உள்ளிட்டோர் பேசினர். மாநில துணை பொதுச் செயலாளர் எஸ்.கண்ணன் நிறைவுரை யாற்றினார். வரவேற்புக் குழுச் செயலாளர் எம்.உதய குமார் நன்றி கூறினார்.
நிர்வாகிகள்
41 பேர் கொண்ட மாவட்டக் குழுவின் தலை வராக எம்.தயாளன், செயலாளராக சி.திரு வேட்டை, பொருளாளராக எஸ்.பாலசுப்பிரமணியம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

;