districts

img

நிரப்பப்படாத காலிப் பணியிடங்கள் பெரம்பூரிலுள்ள குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகம் முன்பு ) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

சென்னை, ஜூலை 10-

      காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்  உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழி யர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் பெரம்பூரிலுள்ள குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகம் முன்பு திங்களன்று (ஜூலை 10) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

     வடசென்னை மாவட்டச் செயலாளர் சீரின் பானு தலைமை தாங்கினார். இதில் திட்ட தலைவர் கோமதி, செயலாளர் அர்ச்சனா, பொருளாளர் பவித்ரா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

     1,993 அங்கன்வாடி ஊழியர்களுக்கு மேற்பார்வையாளர்களாக பதவி உயர்வு  வழங்க வேண்டும், ஐந்தாண்டு பணிமுடித்த  குறு மைய ஊழியர்களுக் கும், 10 ஆண்டு கள் பணி முடித்த உதவியாளர்களுக்கும்  உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும்,

   10 வருடம், 20 வருடம், 30 வரு டம் தேக்கநிலை ஊதியம் வழங்கப்படாமல் இருக்கும் ஊழியர்கள் மற்றும் உதவி யாளர்களுக்கு உடனடியாக அந்த ஊதியம்  பெற்று வழங்க வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கிராமப்புற செவிலியர்கள் பதவி உயர்வு வழங்க வேண்டும், வட்டாரத்தில் ஏற்படும் சிறு சிறு  பிரச்சனைகளை சிடிபிஓ சங்க நிர்வாகி களுடன் அல்லது ஊழியர்களிடம் பேசி தீர்வு  காண வேண்டும், ஒரே ஊழியர் இரண்டு, மூன்று மையங்களை கவனிக்கும் நிலை  உள்ளதால் உடனடியாக காலிப் பணி யிடங்களை நிரப்ப வேண்டும், ஜி.பி.எப் தொகையில் கடன்  வழங்க வேண்டும், மகப்பேறு விடுப்பு அரசு பெண் ஊழியர்களுக்கு வழங்குவது போல் 1 வருடம் வழங்க வேண்டும் உள்ளிட்ட  கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.