ஒலிம்பிக் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்திற்கு வெள்ளி பதக்கம் வழங்க வேண்டும், இந்திய ஒலிம்பிக் சங்கத்தை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளியன்று (ஆக.9) சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் கே.மணிகண்டன் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் எல்.பி.சரவணத்தமிழன், தென்சென்னை மாவட்டச் செயலாளர் தீ.சந்துரு, ஆ.பிரியதர்ஷினி எம்.சி., உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.