திருவள்ளூர், மே 30- திருவள்ளூர் மாவட்டம், சோழவரத்தில் தனியாருக்கு சொந்தமான ஹைட்ராலிக் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி புரிகின்றனர். ஏற்கனவே இந்த நிறுவனத்தில் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி 22 நாட்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. பிறகு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் மே 23 அன்று ஹைட்ரா லிக் நிறுவனத்தின் முன்பு நிறுவப்பட்டிருந்த சிஐடியு கொடி கம்பம் மாற்றும் தகவல் பலகை ஆகியவற்றை நிர்வாகம் அகற்றி யுள்ளது. இதுகுறித்து சோழவரம் காவல் நிலையத்தில் சிஐடியு சார்பில் புகார் அளிக்கப்பட்டது. காவல்துறையினர் விசா ரணையில் நிர்வாகம் கொடி கம்பம் அமைத்து கொடுக்க ஏற்றுக்கொண்டது. இதையடுத்து சிஐடியு அமைப்பு தினமான மே 30 அன்று மாவட்ட குழு உறுப்பினர் நடராஜன் சங்கக் கொடியை ஏற்றி வைத்தார். தகவல் பல கையை மாவட்டத் தலைவர் கே.விஜயன் திறந்து வைத்தார். கிளை தலைவர் ராமச் சந்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சி யில் ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.