கடலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 12-ம் வகுப்பு முடித்த மாணவ-மாணவிகளின் கல்லூரிப் படிப்புக்கு வழிகாட்டும் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் லதா தலைமை தாங்கினார். ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலர் சரவணகுமார், ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளி துணை ஆய்வாளர் வாழ்முனி, மண்டல ஒருங்கிணைப்பாளர் ரவி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அருள் சங்கு ஆகியோர் சிறப்புரையாற்றினர்.