districts

img

தோழர் கே.எஸ்.பார்த்தசாரதி 34ஆம் ஆண்டு நினைவுதினம்

சுதந்திர போராட்ட வீரரும் கைத்தறி நெசவாளர்களின் மகத்தான தலைவருமான தோழர் கே.எஸ்.பார்த்தசாரதியின் 34ஆம் ஆண்டு நினைவு தினம் சிறப்பு பேரவைக் கூட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் காஞ்சிபுரத்தில் மாநகரச் செயலாளர் டி.ஸ்ரீதர் தலைமையில்   திங்களன்று நடைபெற்றது. இதில் சிபிஎம் அகில இந்திய கட்டுப்பாட்டு குழு தலைவர் ஏ.கே.பத்மநாபன் சிறப்புரையாற்றினார். மாநிலக்குழு உறுப்பினர்  இ.முத்துக்குமார், செயற்குழு உறுப்பினர்கள் கே.நேரு, ஆர்.மதுசூதனன் ஆகியோர் பேசினர். மாவட்டக்குழு உறுப்பினர்கள் வி.சிவப்பிரகாசம், எஸ்.சீனிவாசன், ஜி.வசந்தா, நகரக் குழு உறுப்பினர்கள் ஜி.எஸ்.வெங்கடேசன், சி.மகேந்திரன், இ.சம்பத், எம்.சூரியாபாரதி, எல்.லட்சுமிபதி, கே.ஜீவா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.