இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 17ஆவது மாநில மாநாடு கள்ளக்குறிச்சியில் செப்டம்பர் 11 முதல் 13ஆம் தேதி வரை நடைபெறுவதையொட்டி, கடலூர் தியாகிகள் குமார், ஆனந்தன் நினைவு ஜோதி பயணம் புதுப்பாளையத்தில் இருந்து புறப்பட்டது. முன்னதாக நினைவு ஜோதியை முன்னாள் மாநிலத் தலைவர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு எடுத்துக் கொடுக்க மாநில செயற்குழு உறுப்பினர் டி.கிருஷ்ணன் பெற்றுக் கொண்டார். இதில் முன்னாள் மாவட்டச் செயலாளர்கள் ஜே.ராஜேஷ் கண்ணன், ஆர்.அமர்நாத், மாவட்டத் தலைவர் கே.சின்னத்தம்பி, மாவட்டச் செயலாளர் எஸ்.வினோத்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.