ஆரணி, ஜூலை 3-
ஆரணி நகர மூனுகபட்டு முள்ளிப்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைத்தறி பட்டு நெசவாளர்கள் இந்த தொழிலை நம்பி வாழ்ந்து வருகின்றனர்.
மேலும் கடந்த சில மாதங்களாக ஆரணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கைத்தறி பட்டு புடவை நெய்வதற்கு பதிலாக விசைத்தறி (பவர்லூம்) புடவை குறைந்த விலையில் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
ஆரணி நகர அருணகிரி சத்திரம் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற ஆரணி கைத்தறி பட்டு நெசவாளர்கள் உற்பத்தியாளர் சங்கம் சார்பில் தலைவர் பரமாத்தமன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் ஆரணி சுற்றியுள்ள பட்டு கைத்தறி நெசவாளர்கள் பங்கேற்றனர். இதில் ஒன்றிய மாநில அரசுகள் ஆரணி சுற்றுவட்டார பகுதியில் விசைத்தறி பட்டு நெய்யப்பட்டு கைத்தறி பட்டு என்று விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. விசைத்தறி பட்டு நெய்வதால் கைத்தறி பட்டு நெசவாளர்கள் உற்பத்தியாளர்கள் வாழ்வாதாரம் கேள்வி குறியாகி உள்ளது.
கடந்த 3 மாதங்களில் கைத்தறி பட்டு சுமார் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு உற்பத்தி செய்யப்பட்டு விசைத்தறியில் தேக்கமடைந்துள்ளன. ஆகையால் உடனடியாக ஒன்றிய-மாநில அரசுகள் விசைத்தறி நெய்தலை தடுத்து நிறுத்தி கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.