சேலம், டிச.18- சேலத்தில் காவல்துறையினர் பதிந்த பொய்வழக்கிலிருந்து வாலிபர் சங்கத்தினர் அனைவரை யும் விடுதலை செய்து நீதிபதி தீர்ப் பளித்துள்ளர். சேலம் மாநகரம், 5 ஆவது கோட் டம் பெரியபுதூர் பகுதியில் போக்கு வரத்துக்கு இடையூறாக நடுரோட் டில் அமைந்துள்ள மின்கம்பத்தை மாற்ற வேண்டும். அதேபகுதியில் புதிய டிரான்ஸ்பாராம் அமைத்து மும்முனை மின்சாரம் வழங்க வேண் டும் என வலியுறுத்தி கடந்த 10.07.2019 அன்று சொர்ணபுரி மின்வாரிய அலு வலகம் முன்பு வாலிபர் சங்கத்தினர் அமைதியான முறையில் காத்தி ருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்பின் மின்வாரிய அதிகாரிகளு டன் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக் கைகளும் நிறைவேற்றப்பட்டதால், போராட்டம் வெற்றியடைந்தது. இந் நிலையில், இப்போராட்டத்தில் ஈடு பட்ட வாலிபர் சங்கத்தினர் மீது பல் வேறு பிரிவுகளில் சேலம் மாநகர காவல்துறையினர் பொய்வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு சேலம் 5 ஆவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் வாலிபர் சங்கத்தினருக்காக வழக் கறிஞர் எம்.வெற்றிவேல் ஆஜராகி வாதாடி வந்தார். இந்நிலையில், காவல்துறையி னரின் இந்த பொய் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட வாலிபர் சங்க நிர்வாகி கள் அனைவரையும் விடுவித்து நீதி பதி தீர்ப்பளித்தார். இதையடுத்து நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் வெற்றிவேல் மற்றும் வழக்கில் விடு தலையான வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் வெங்கடேஷ், நிர்வாகி கள் கதிர்வேல், செந்தில்குமார், சசிக் குமார், கார்த்தி, மணிகண்டன், ஆஜித், பிரகாஷ் ஆகியோரை மார்க்சிஸ்ட் கட்சியின் வடக்கு மாநகர செயலா ளர் என்.பிரவீன்குமார், வாலிபர் சங்க வடக்கு மாநகர செயலாளர் ஆர்.குருபிரசன்னா ஆகியோர் பாராட்டி, வாழ்த்து தெரிவித்தனர்.