districts

img

எழுத்தாளர் அ.முத்துலிங்கத்துக்கு கி.ரா. விருது

கோவை, செப்.17- கோவை விஜயா வாசகர்  வட்டம் சார்பில் கி.ரா. விருது, எழுத்தாளர் அ.முத்துலிங்கத் திற்கு வெள்ளியன்று வழங்கப் பட்டது. கோவை விஜயா வாசகர் வட்டம் சார்பில் ஆண்டுதோ றும் சிறந்த எழுத்தாளருக்கு ரூ.5 லட்சம் ரொக்கப்பரிசுடன் கி.ரா. விருது வழங் கப்பட்டு வருகிறது. சக்தி மசாலா நிறுவனம் வழங்கும் விஜயா வாசகர் வட்டத்தில் 2022 ஆம் ஆண்டுக்கான கி.ரா. விருதுக்கு, கனடா நாட்டில் வசிக்கும் எழுத்தாளர் அ.முத்துலிங் கம் தேர்வு செய்யப்பட்டார். இந்த விருது வழங்கும் நிகழ்வானது, கி.ரா.வின் பிறந்த நாளான வெள்ளியன்று இணையவழியில் நடைபெற்றது. விஜயா பதிப்பகத்தின் நிறுவ னர் மு.வேலாயுதம் வரவேற்புரையாற்றி னார். இதில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் சிறப்புரையாற்றினார். அப் போது அவர் பேசுகையில், ஒரு சிறந்த படைப்பாளிக்கு வழங்கப்படும் விருதால் படைப்புலகம் பெருமைப்படுகிறது. மாறு பட்ட தன்மையுடன் கதைகளை படைத்து  காட்டக்கூடிய ஒரு சில சிறந்த எழுத்தாளர் களில் அ.முத்துலிங்கமும் ஒரு வர் ஆவார்.

வாசகர் பார்வை யில் ஒரு படைப்பை பல்வேறு மாற்றங்களுக்கு உள்படுத்தி தனக்கான வடிவத்தை அறி யக்கூடிய படைப்புகளை உரு வாக்கியவர்கள் சிலர் என்றா லும், தமிழ் எழுத்துலகில், படைப்புகளை இலக்கியத்தரத் தில் தந்த வெகுசிலரில் முத்து லிங்கமும் ஒருவர். இனம், மொழி, சமயம் கடந்து நிற்கின்ற இவரது கதைகள் எந்த வொரு பாணியையும் பின்பற்றாதவை. பய ணங்களில் ஊடாக செல்லக்கூடிய இவரது கதைகள் வரலாறு, வட்டார வழக்கு, உலக  அரசியல் சூழ்ந்த பாதிப்புகளை உள்வாங்கி, அனைத்து தளங்களிலும் பயணிக்கின்றன. இதைத்தொடர்ந்து சக்தி மசாலா நிறுவ னர்கள் பி.சி.துரைசாமி, சாந்தி துரைசாமி, வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், திரைக்கலைஞர் சிவக்குமார், எழுத்தாளர் கள் ஆஸ்டின் சௌந்தர், நாஞ்சில் நாடன், ஜெயமோகன் ஆகியோர் வாழ்த்துரையாற்றி னர். முடிவில் எழுத்தாளர் அ.முத்துலிங்கம் ஏற்புரையாற்றினார். கவிஞர் ரவி சுப்பிரமணி யம் நிகழ்வை தொகுத்து வழங்கினார்.

;