districts

img

உலக புகையிலை ஒழிப்பு தினம்: கல்லூரி சாலையில் விழிப்புணர்வு பேரணி

திருப்பூர், மே 31- உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு வெள்ளி யன்று சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் புகை  அரக்கன் வேடம் அனிந்து கல்லூரி சாலையில் விழிப்புணர்வு  பேரணி நடத்தினர். திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்டம் அலகு -2 சார்பாக உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கல்லூரி சாலையில் வித்தியாசமான முறையில் புகையிலை தொழிற்சாலையில் இருந்து சிறுவர் களை பாதுகாத்தல் என்ற மைய கருத்தை வலியுறுத்தி விழிப் புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்விற்கு அலகு 2 ஒருங் கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். அரசு மருத்துவர் கலைச்செல்வன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில், மாணவர்கள் புகை பிடிக்கும் பழக்கத் திற்கு அடிமையாக கூடாது. புகைபிடிப்பதால் அவர் மட்டு மில்லாமல் அவரை சார்ந்து இருப்பவர்களும் பாதிக்கப்படு கிறார்கள். இதற்கு அடிமையாவர்களுக்கு புற்றுநோய், சுவாச  கோளாறு மட்டுமல்லாமல் பல நோய்கள் உருவாகிறது. மேலும் இவற்றால் உடல் பாதிப்பும், உயிரிழப்பும் ஏற்படுகி றது. பொது மக்கள் கூடும் பகுதிகளில் புகைபிடிப்பதை தவிர்க்க வேண்டும். மக்களிடமும், மாணவர்களிடமும் இப்ப ழக்கத்தை தவிர்க்க விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும்  என்றார். இதில், மாணவ செயலர்கள் மதுகார்த்திக்,  கிருஷ்ண மூர்த்தி, கவிபாலா, லோகேஷ்குமார், சுந்தரம், நவீன்குமார்  ஆகியோர் தலைமையில் மாணவர்கள் புகைப்பிடிப்பதால் ஏற்படும் விளைவுகள் மற்றும் புகை  அரக்கன் போன்ற  வேட மணிந்தும், பேரணி சென்றும் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், வாகன ஓட்டிகளுக்கு துண்டு பிரசுரங்களை கொடுத்தும் விழிப்புணர்வு ஏற்படுத் தினர். இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.