districts

img

பணியிடங்களில் உடல் உபாதைகள் போக்க வசதி கட்டுமான உழைக்கும் பெண்கள் மாநாடு கோரிக்கை

திருப்பூர், மார்ச் 24- கட்டுமான பணி செய்யும் இடங் களில், உடல் உபாதைகளைப் போக்குவதற்கு உரிய கழிப்பிட வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என திருப்பூர் மாவட்ட கட்டுமா னத் தொழிலாளர் சங்க உழைக் கும் பெண்கள் 5 ஆவது மாநாடு வலியுறுத்தி உள்ளது. திருப்பூர் மாவட்டம், காங்கயத் தில் உள்ள தனியார் மண்டபத்தில்,  சிஐடியு கட்டுமான உழைக்கும் பெண்கள் 5 ஆவது மாவட்ட மாநாடு செவ்வாயன்று, சங்கடத் தின் காங்கயம் தாலுகா பொருளா ளர் பி.பாரதி தலைமையில் நடை பெற்றது. இம்மாநாட்டை உழைக் கும் பெண்கள் மாநில ஒருங்கி ணைப்பாளர் ஜெ.லூர்து ரூபி  தொடங்கி வைத்து உரையாற்றி னார். முன்னதாக சங்கத்தின் கொடியை முத்தம்மாள் ஏற்றி  வைத்தார். கார்த்திகா வரவேற் புரையாற்றினார். மாநாட்டை வாழ்த்தி திருப்பூர் மாவட்ட கட்டு மான சங்கச் செயலாளர் ரமேஷ், மாநிலக்குழு உறுப்பினர்கள் எம். கணேசன், ஏ.ராஜன், வெள்ளகோ வில் மார்க்சிஸ்ட் கட்சி நகர்மன்ற உறுப்பினர் எம்.ராதாமணி ஆகி யோர் உரையாற்றினர்.

இம்மாநாட்டில், பெண் தொழி லாளர்களுக்கு 55 வயதில் ஓய்வூதி யம், கட்டுமானப் பணியிடங்களில் உடல் உபாதைகளைக் கழிக்க கழிப்பிட வசதி, ரூ.18 ஆயிரம் பிர சவ உதவி, கணவர் பதிவு செய்தி ருந்தாலும் பிரசவ உதவி மற்றும்  திருமண உதவி ரூ.5ஆயிரம் வழங்க வேண்டும். தமிழக அரசின் மருத்துவக் காப்பீட்டுடன் நலவா ரிய உறுப்பினர்களை இணைத்து மருத்துவ வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல் வேறு தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன. புதிய நிர்வாகிகள் தேர்வு இம்மாநாட்டில், திருப்பூர் மாவட்ட கட்டுமான உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு வின் கன்வீனராக கார்த்திகா, உதவி கன்வீனர்களாக ஜோதி, பாப்பாத்தி, அழகேஸ்வரி, பாரதி ஆகியோர் தேர்வு செய்யப்பட்ட னர். மேலும், அமுதா, சசிகலா, மாதம்மாள், தேவி, முருகேஸ்வரி, பாப்பாள், மல்லிகா ஆகிய ஏழு பேர் கமிட்டி உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர். மாநாட்டை நிறைவு செய்து  வைத்து கட்டுமானத் தொழிலாளர் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் டி.குமார் உரையாற்றினார். முடி வில் காங்கயம் சசிகலா நன்றி கூறினார்.