districts

img

புதிய மோட்டார் வாகன சட்டத்தை திரும்பப்பெறுக

வாகன வியாபாரிகள் மனு நாமக்கல், மே 20- புதிய மோட்டர் வாகன திருத்தச்சட் டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய நடைமு றையை கொண்டு வர வேண்டும் என வலியு றுத்தி வாகன வியாபாரிகள் சங்கத்தினர் நாமக்கல் ஆட்சியரிடம் மனு அளித்தனர். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில், பரமத்திவேலூர் வாகன வியாபாரி கள் மற்றும் ஆலோசகர் நல சங்கத்தின் சார் பில் மனு ஒன்று வழங்கப்பட்டது. அம்மனு வில், ஒன்றிய அரசின் புதிய மோட்டார் வாகன திருத்தச்சட்டத்தால், தமிழ்நாட்டில் மோட் டார் வாகனத்தொழில் மிகவும் நலிவடைந் துள்ளது. இந்த தொழிலை நம்பியுள்ளவர்க ளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால், புதிய விதிமுறைகளை மாற்றி பழைய விதி முறைகளை ஒன்றிய அரசு அமல்படுத்த வேண்டும். பதிவு சான்றிதழ், பெயர், முன் னாள் ஓடிபி (OTP) அனுப்புதல் மற்றும் ஆதார் அட்டை சமர்ப்பித்தல் முறையை ரத்து செய்ய வேண்டும். தபால் வழியாக ஆர்சி புத்த கம் மற்றும் வாகன சம்பந்தமான ஆவணங் களை அனுப்பும் முறையை ரத்து செய்ய  வேண்டும் உள்ளிட்டவைகள் வலியுறுத்தப் பட்டுள்ளது. இந்நிகழ்வில், பரமத்திவேலூர் வாகன  வியாபாரிகள் மற்றும் ஆலோசனை நலச்சங்க மாவட்டத் தலைவர் பெரியார், செயலாளர் கார்த்திகேயன் ஆகியோர் உடனிருந்தனர்.

;