districts

img

பாக்ஸ்கான் தொழிலாளர்கள் மீது போடப்பட்ட வழக்கை திரும்பப்பெறுக: சிஐடியு வலியுறுத்தல்

தருமபுரி, டிச.19- பாஸ்கான் பெண் தொழிலாளர் கள், தொழிற்சங்க நிர்வாகிகள் மீது போடப்பட்ட வழக்கை திரும்பப்பெற வேண்டும் என சிஐடியு வலியுறுத்தி உள்ளது. சிஐடியு தமிழ்நாடு சமூக வலை தளக் கூட்டம் தருமபுரி சிஐடியு அலுவ லகத்தில் கே.சரவணன் தலைமையில் நடைபெற்றது. இதில், சிஐடியு மாநி லச் செயலாளர்கள் எம்.எம்.சந்திரன், சி.நாகராசன், சமூக வலைத்தள மாநில அமைப்பாளர் கே.சி.கோபி குமார், நிர்வாகிகள் வெல்கின், பரணி,  முத்தமிழ், சுரேஷ் உள்ளிட்ட பலர் பங் கேற்றனர். இக்கூட்டத்தில், காஞ்சிபுரம் ஒரக்கடத்தில் உள்ள பாக்ஸ்கான் தொழிற்சாலை செயல்பட்டு வருகி றது. இங்குள்ள பெண் தொழிலாளர் விடுதியில் உள்ள தரமற்ற உணவகத் தில் சாப்பிட்ட  நூற்றுக்கணக்கான பெண் தொழிலாளர்கள் மயக்கமடைந் தனர்.

இதில், ஒருவர் இறந்துவிட்டதாக  தகவல் பரவியதை தொடர்ந்து பெண்  தொழிலாளர்கள் சென்னை - பெங்க ளூர் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடு பட்டனர். ஆனால், இவர்களிடம் காவல்துறை பேச்சுவார்த்தை நடத் தாமல் தொழிற்சங்க நிர்வாகிகளை கைது செய்துள்ளது வன்மையாக கண் டிக்கதக்கது. எனவே, உயிரிழந்த பெண் தொழிலாளர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்க நிர்வாகிகள், தொழிலா ளர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்கை திரும்பப்பெற வேண்டும் என வலியு றுத்தப்பட்டது. மேலும், ஒன்றிய அரசின் தொழி லாளர், விவசாயிகள் மற்றும் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து சிஐடியு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களின் சார்பில் பிப் ரவரி 23, 24 ஆகிய தேதிகளில்  அகில இந்திய வேலைநிறுத்த இயக்கத்தை அறிவித்துள்ளது. இந்த வேலை நிறுத் தத்தை வெற்றி பெற செய்யும் விதமாக தொழிலாளர்கள், மாணவர்கள், இளை ஞர்கள், பெண்கள் என அனைத்து தரப்பு மக்களிடம் கொண்டு செல்ல பிரச்சாரம் மேற்கொள்வது என தீர்மா னம் நிறைவேற்றப்பட்டது.

;