districts

img

நொய்யல் ஆற்றில் மிதந்த வெண்நுரை!

கோவை, மே 17- நொய்யல் ஆற்றின் சுண்ணாம்பு காளவாய் அணைக் கட்டில் படிந்த வெண்நுரையால் பொதுமக்கள் அவதிப் படுவதால், கழிவுநீர் ஆற்றில் கலப்பதை தடுக்க மாநக ராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை  எழுந்துள்ளது.  கோவை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உற்பத்தியாகும் நொய்யல் ஆறு திருப்பூர், ஈரோடு மாவட்டங்கள் வழியாக பயணித்து காவிரியில் கலக்கி றது. இந்நிலையில், கோவை திருப்பூர், ஈரோடு மாவட் டங்களில் பாசன வசதிக்கு பெரிதும் உதவியாக இருக் கும் நொய்யல் ஆற்றில் சாயக் கழிவுகள் கலந்து மாசு  ஏற்படுவது வாடிக்கையாக இருக்கிறது. இந்த நிலை யில் கடந்த சில தினங்களாக கோவையில் பரவலாக மழை பெய்து வருவதால், சாயப்பட்டறைகளில் இருந்து  வெளியேற்றப்பட்ட கழிவுகள் நொய்யல் ஆற்றில் கலந்து, சுண்ணாம்பு காளவாய் அணைக்கட்டில் நுரை படிந்து காணப்படுகிறது. நுரை படலங்கள் காற்றில் பறந் ததால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். சாயக்கழிவுடன் சாக்கடை கழிவு நீரும் கலந்து வருவ தால் நொய்யல் ஆற்றில் தண்ணீர் கருமை நிறமாக காட்சி அளிக்கிறது. கழிவு நீர் ஆற்றில் கலப்பதை கட்டுப்ப டுத்த மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

;