districts

img

ரயில்வே தொழிற்சங்க அங்கீகார தேர்தல்

சேலம், டிச 4- ரயில்வே தொழிற்சங்க அங்கீ கார தேர்தல் டிசம்பர் 4ஆம் தேதி  முதல் 6ம் தேதி வரை மூன்று நாட் கள் நடைபெற உள்ளது. இதில் சிஐ டியு தொழிற்சங்க ரயில்வே ஊழி யர்கள் அமைப்பான டிஆர்இயூ  நட்சத்திரம் சின்னத்தில் போட்டியிடு கிறது. சேலத்தில் தேர்தல் நடை பெறும் வளாகம் முன்பு டிஆர்இயு தேர்தல் பணி மனையில் ரயில்வே  தொழிலாளர்கள் குவிந்த வண்ணம்  உள்ளனர். சேலம் ரயில்வே கோட்ட மேலா ளர் அலுவலகத்தில் ரயில்வே தொழிற்சங்க அங்கீகார தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 8:00  மணி முதல் மாலை 6 மணி வரை தேர்தல் நடைபெறுகிறது. சேலம் ரயில்வே கோட்ட துணைக் கோட்ட மேலாளர் சிவலிங்கம் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டு தேர்தல் நடைபெற்று வருகிறது. சேலம் ரயில்வே கோட்டத்திற்கு  உட்பட்ட சேலம், கிருஷ்ணகிரி, தரு மபுரி, ஆத்தூர், சின்ன சேலம், நாமக் கல், ஈரோடு, கரூர், திண்டுக்கல், கோயமுத்தூர், திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்து 8,653 பேர் தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறும் வாக்குப்பதிவு முடிந் தவுடன் டிசம்பர் 12ஆம் தேதி சேலம் ரயில்வே கோட்ட மேலா ளர் அலுவலகத்தில் உள்ள அரங் கத்தில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள் ளது.  முன்னதாக, சேலம் ரயில்வே  கோட்ட மேலாளர் அலுவலக நுழைவு வாயிலில் சிஐடியு மாவட் டச் செயலாளர் ஏ.கோவிந்தன் தலைமையில், சாலை போக்கு வரத்து சங்க மாநில துணைத்தலை வர் எஸ்.கே.தியாகராஜன், டிஆர் இயூ சங்க செயலாளர் அல்லிமுத்து  உள்ளிட்டோர் தேர்தல் பணியாற்றி  வருகின்றனர்.  தொடர்ந்து வெள் ளிக்கிழமை வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முன்னதாக  டிஆர்இயூ தேர்தல் பணிமனை யில் ரயில்வே தொழிலாளர்கள் ஆர் வத்துடன் அணுகி வருகின்றனர். முன்னெப்போதும் இல்லாத வகை யில் டிஆர்இயூ தேர்தல் பணிமனை  களைகட்டி இருப்பது தொழிற்சங்க  தலைவர்களிடையே பெரும் நம் பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு இதேபோன்று, ஈரோடு மாவட்டத்திலும் ரயில்வே தொழிற் சங்க தேர்தலில் ஊழியர்கள் வாக்க ளிக்க தயாராகி வருகிறார்கள். பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகளுடன் டிஆர்இயு தேர்தல் களம் கண்டு  வருகிறது. டிஆர்இயு வின் நட்சத்தி ரம் சின்னத்திற்கு சிஐடியு நிர்வாகிக ளும் வாக்கு சேகரித்தனர். இந் நிலையில் புதனன்று முதல் கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்டபடி தொடங்கியது. ஈரோடு சந்திப்பில்  3 வாக்குச்சாவடிகள் அமைக்கப் பட்டிருந்தது. அனைத்து பிரிவு ஊழி யர்களும் வாக்களித்தனர். தேர்த லுக்கான வாக்குப்பதிவு தொடங் கிய நிலையில் வாக்களர்களுக்கு நட்சத்திரம் சின்னத்தை நினை வூட்டி பூத் சிலிப் வழங்கும் பணி யில் டிஆர்இயு நிர்வாகிகள் ஈடுபட்ட னர்.