districts

தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோரிக்கை ஏற்பு: அமராவதி பிரதான வாய்க்காலில் மார்ச் இறுதி வரை தண்ணீர் திறப்பு

உடுமலை, பிப்.24 - அமராவதி பிரதான வாய்க்காலுக்கு உட் பட்ட பகுதிகளுக்கு மார்ச் மாதம் இறுதி வரை  தண்ணீர் விட வேண்டும் என்று தமிழ்நாடு  விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்ததை  ஏற்று, மார்ச் மாதம் இறுதி வரை இப்பகுதிக ளுக்குத் தண்ணீர் விடப்படும் என்று அர சாணை வெளியிடப்பட்டுள்ளது. அமராவதி அணை செயற்பொறியா ளரிடம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை மனு அளித்திருந்தனர். அமரா வதி பிரதான வாய்க்காலுக்குட்பட்ட  பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இனம் தெரியாத நோய் தாக்குத லால் 500 ஏக்கருக்கு மேல் நெற்பயிர் கருகி விட்டது. வருவாய் மற்றும் வேளாண்மைத்  துறை அலுவலர்கள் அனைத்து பகுதிகளி லும் ஆய்வு மேற்கொண்டனர். இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் வேளாண்மை துறை உயர்  அலுவலர்களும் மறு நடவும், விதைப்பும் செய்ய ஆலோசனை வழங்கினர். மார்ச் மாதம் இறுதி வரை அணையில் இருந்து தண் ணீர் அளிப்பதாக வாக்குறுதி அளித்தனர்.  இந்நிலையில் பிப்ரவரி மாத இறுதியில் தண்ணீர் நிறுத்தப்பட்டு விட்டால். நடவு பயிர் களைக் காப்பாற்ற முடியாது. எனவே மார்ச்  மாதம் இரண்டாம் வாரமும், கடைசி வாரமும்  5+5 தினங்களுக்கு அமராவதி அணையில் இருந்து தண்ணீர் விட்டு விவசாயிகளின் நெற் பயிர்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க  வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்க  மடத்துக்குளம் தாலுகா செயலாளர் எம்.எம். வீரப்பன், அமராவதி அணை செயற்பொறியா ளரிடம் பிப்.13 ஆம் தேதி கோரிக்கை  மனு  அளித்திருந்தார்.  இந்நிலையில், அமராவதி ஆற்றில் உள்ள  முதல் எட்டு பழைய இராஜவாய்க்கால்களின் (இராமகுளம், கல்லாபுரம், குமரலிங்கம், சர்க்கார் கண்ணாடிபுத்தூர், சோழமாதேவி, கணியூர், கடத்தூர் மற்றும் காரத்தொழுவு) 7520 ஏக்கர் பாசனப் பகுதிகளுக்கு பிப்.25  முதல் மார்ச் 30 வரை தகுந்த இடைவெளி விட்டு 21 நாட்களுக்கு அமராவதி ஆற்று மதகு  வழியாக விநாடிக்கு 300 கன அடி வீதம் 544.32  மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறக்கப்பட உள்ளது. மேலும், அமராவதி புதிய பாசனப் பகுதிகளில் உள்ள 25,250  ஏக்கர் நிலங்களுக்கு பிப்.25 முதல் மார்ச் 20  ஆம் தேதி வரை தகுந்த இடைவெளிவிட்டு 10  நாட்களுக்கு அமராவதி பிரதான கால்வாய்  வழியாக விநாடிக்கு 440 கன அடி வீதம் 380.16  மில்லியன் கன அடிக்கு மிகாமலும், ஆக மொத்தம் 924.48 மில்லியன் கன அடிக்கு மிகா மல், அணையின் நீரிருப்பு மற்றும் நீர்வரத்தி னைப் பொறுத்து, தேவைக்கேற்ப, அமரா வதி அணையிலிருந்து, தண்ணீர் திறந்து விட  அனுமதி அளித்து அரசு ஆணையிட்டுள்ளது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று, பாதிக்கப்பட்ட விவசா யிகளின் நலன் கருதியும் கூடுதல் கால அவ காசம் தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியருக்கும், நீர்வளத் துறை அதிகாரிகளுக்கும் விவசாயிகள் சார் பில் நன்றி தெரிவிப்பதாக தமிழ்நாடு விவசா யிகள் சங்க மடத்துக்குளம் தாலுகாச் செயலா ளர் எம்.எம்.வீரப்பன் கூறினார்.