districts

img

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை இல்லாத வ.உ.சி பூங்கா

கோவையின் அடையாளங்க ளில் ஒன்றாக மாநகராட்சி வ.உ.சி உயிரியல் பூங்கா உள்ளது. இந்த பூங் காவானது கடந்த 1965ம் ஆண்டு உரு வாக்கப்பட்டது. ஊர்வன, பறப்பன, பாலூட்டிகள் என 40 வகை உயிரி னங்களில் 532 விலங்குகள் வரை இந்த உயிரியல் பூங்காவில் வைத்து  பராமரிக்கப்பட்டு வந்தன. வார நாட்க ளில் இந்த பூங்காவுக்கு நாள்தோறும்  300 முதல் 350 பேர் வரையிலும், விடு முறை நாட்களில் 2,000 பேர் வரை யும் வந்து செல்வர். இந்நிலையில், பூங்கா மற்றும் விலங்கினங்களின் பராமரிப்பு விவகாரத்தில் பல்வேறு குறைபாடுகள் காரணமாக மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் கால நிலை மாறுபாடு துறையின் கீழ் செயல் படும் மத்திய உயிரியல் பூங்கா ஆணையம், கோவை மாநகராட்சி உயிரியல் பூங்காவுக்கான அங்கீகா ரத்தை ரத்து செய்துள்ளது. இதனால்,  அங்கு பராமரிக்கப்பட்டு வந்த விலங் குகள் வண்டலூர் உயிரியல் பூங்கா வும், அடர்ந்த காட்டுப்பகுதிகளுக் கும் மாற்றப்பட்டு, வ.உ.சி உயிரியல்  பூங்கா மூடப்பட்டது.  இதைத்தொடர்ந்து, வ.உ.சி  பூங்காவுக்கு மட்டும் கோவை மக்கள்  வந்து சென்று வருகின்றனர். அப் பூங்கா கோவை மாநகராட்சி சார்பில்,  ஒப்பந்த முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இப்பூங்காவிற்கு வரும்  பெரியவர்கள் ரூ.10ம், சிறியவர்க ளுக்கு ரூ.5ம் நுழைவு கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது. ஏற்க னவே, விலங்குகள் இல்லாததால் அங்கு வரும் மக்களின் எண்ணிக்கை யும் பெருமளவு குறைந்துள்ள நிலை யில், தற்போது பணப்பரிவர்த்தனை காரணமாகவும் மக்கள் வருவதை குறைந்துள்ளாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.  அதாவது, நாடு முழுவதும் பணப் பரிவர்த்தனை டிஜிட்டலாக மாற்றப் பட்டு, மக்கள் அனைவரும் அதை பின்பற்றி வருகின்றனர். ஆயிரம் ரூபாயாக இருந்தாலும், ஒரு ரூபா யாக இருந்தாலும் அதை டிஜிட்ட லில் செலுத்தும் அளவிற்கு மக்கள் பழகிவிட்டனர். இச்சூழலில், அரசு  சார்ந்த வ.உ.சி பூங்காவில் நுழைவுக்  கட்டணம் வாங்க கையில் பணம்  கொடுப்பதை மட்டுமே இன்னும் பயன் படுத்தப்படுகிறது. கோவை மாநக ராட்சி, குப்பை வரி, சொத்துவரி உள்ளிட்ட அனைத்து வரியினங்களை யும் ஆன்லைன் மூலமாக வசூல் செய் யும் நடைமுறையை கொண்டு வந் துள்ளது. ஆனால், வஉசி பூங்கா  நுழைவு கட்டணத்தை காசு கொடுத் தால் மட்டுமே அனுமதிக்க முடியும்,  டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை கிடை யாது என்பது உள்நோக்கம் கொண்டதாக பார்க்கப்படுகிறது. மேலும், டிஜிட்டல் பணப்பரிவர்த்த னையை நம்பி வரும் குடும்பங்கள், அது இல்லாததால் ஏமாற்றம டைந்து திரும்பிச் செல்கின்றனர். குறைந்த கட்டணம் என்பதால்  இதனை மக்கள் பெரிதும் பொருட்ப டுத்தவில்லை. ஆனால் மொத்த கட்ட ணமாக வசூலிக்கப்படும் போது  இதன் மதிப்பு அதிகமாகும். அப்பூங் காவைச் சுற்றி அமைந்துள்ள கடை கள், உணவகங்கள் என பல இடங்க ளில் டிஜிட்டல் முறை இருக்கும் போது, பூங்காவில் மட்டும் கையில் பணம் செலுத்துவது ஏமாற்றம் அளிப்பதாக மக்கள் வேதனை தெரி விக்கின்றனர். மேலும், கையில் பணம் கொடுப்பது ஊழலுக்கு வழிவ குக்கும் எனவும் மக்கள் குற்றச் சாட்டை முன்வைக்கின்றனர்.  எனவே, கோவை மாநகராட்சி கட் டுப்பாட்டில் உள்ள வ.உ.சி பூங்கா வுக்கு வரும் மக்களின் பண சேவையை எளிதாக்கவும், பூங்கா வில் வசூலிக்கப்படும் பணம் ஊழ லுக்குள் செல்லாமலும் இருக்க பூங் காவில் டிஜிட்டல் முறை கொண்டுவ ரப்பட வேண்டும் என, அங்கு வரும்  மக்களின் கோரிக்கையாக உள்ளது.     குலோத்தினிபாய் - நந்தினி

;