districts

img

வீடும் நூலகமும் - ஆர்.ஜெயசீலன்

வீடுகளின் மொட்டை மாடிகளில் காய்கறித் தோட்டம். காளான் உற்பத்தி. வீட்டு அறைகளில் அழகுச் செடிகள் வைப்பது . விதவிதமான திருஷ்டி பொம்மைகள். இன்றும் பலர் சொல்வதை கேட்டு தேவையற்ற மூடநம்பிக்கை சாதனங்களையும் செடி கொடிகளையும் வைத்து பாராமரிக்க இடம் ஒதுக்கும் நம்மில் பலர் நடை முறை வாழ்வுக்கும் எதிர்கால தலைமுறையினருக்கும் ஒளியை ஏற்றி அறிவை வளர்க்கும் அறிவு சார்ந்த புத்தகங்களை வைத்து பாதுகாக்க ஒரு சிறிய இடத்தை ஓதுக்குவதில்லை. 

காரணம் அவர்கள் மனதில் வீடுகளில் ஒரு சிறு நூலகம் அமைக்கலாம் என்ற எண்  ணமே இல்லாமல் போவதாலும் அப்படியே அமைத்தாலும் அதனால் என்ன பயன்  என்ற எண்ணமும் மேலோங்குவதால்தான். அவ்வாறு ஒதுக்கும் நபர்களை விரல் விட்டு எண்ணுமளவுக்கு சொற்ப அளவே உள்ளார்கள் என்பது நிதர்சனமான உண்மை.  இதை மெய்ப்பிக்கும் விதமாக சமீ பத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடந்த  புத்தக திருவிழாவை முன்னிட்டு புத்தக வாசிப்பாளர்கள் குறித்தான ஒரு காணொளி காட்சி தயாரிக்கும் பொருட்டு மாவட்டத்தில் அடையளம் காணப்பட்ட சில புத்தக வாசிப்பாளர்களின் விபரம்  அறிந்து பலரை சந்தித்து நேர்காணல் செய் யும் வாய்ப்பு கிடைத்தது. அது சமயம் ஆசி ரிய நண்பர் சிறநத புத்தக வாசிப்பாளர் என்பதை அறிந்து அவர் வீட்டுக்குச் சென்ற போது அவர் வீட்டில் கண்ட காட்சி பெரும்  வியப்பை ஏற்படுத்தியது. அத்தகைய வியப்பை அந்த வீட்டில் தந்தது அவர் அமைத்திருந்த அழகிய  “வீட்டு நூலகம்” தான்.. பேரரறிஞர் அண்ணா கூறியது போல் ”வீட்டிற்கு ஒரு நுாலகம் அமைக்க வேண்டும்” என்ற வாசகத்தின் பொருளை உண்மையில் அன்று காண நேரிட்டது. இன்னும் சொல்வதென்றால் அந்த ஆசிரிய நண்பர் அமைத்திருந்தது  ஒரு வீட்டு நூலகம் போல் இருந்தாலும் அது ஒரு பொது நுாலகமாகவே காட்சி யளிக்கும் அளவிற்கு சுமார் 7000 புத்த கங்களுக்கு மேல் வீட்டில் அதற்கென ஒதுக்கப்பட்ட நான்கு தனி அறைகளில் அமைத்திருந்தார். பொது நூலகங்களில் புத்தகங்கள் தலைப்பு வாரியாகவும் பொருள் வாரியாகவும் அடுக்கி வைக் கப்பட்டிருந்தன.

மட்டுமல்லாமல் புத்தகங்களை எவ்வி தம் அடுக்க வேண்டும். புத்தகங்கள் நீண்ட  நாட்கள் கெடாமல் இருக்க புத்தகங்கள்  இருக்கும் இடத்தின் சுற்றுச் சூழல் எவ்விதம் நல்ல காற்றறோட்டமான இடமாக இருக்க  வேண்டும். என்பதையெல்லாம் உணர்ந்து  புத்தகங்கள் அனைத்தையும் தலைப்பு வாரியாக குறிப்புகளோடு கண்ணாடி அலமாரிகளில் அழகு நயம் பொருந்தி அடுக்கி வைக்கப்பட்டிருந்த காட்சியை காணும் போது அவரை ஒரு சிறந்த  புத்தக வாசிப்பாளர் என்ற நிலையிலிருந்து  அவரை ஒரு ”சிறந்த நூலகர்” என்றும் பாவிக்க தோன்றியது. அது மட்டுமின்றி கல்லுாரி மாண வர்களும் ஆராய்ச்சி மாணவர்களும் தாங்  கள் மேற்கொள்ளும் ஆராய்ச்சி படிப்பு களுக்கு இவரிடம் உள்ள புத்தகங்களின் வாயிலாக குறிப்புதவி பெறுகிறார்கள் அதற்கேற்ப காணக்கிடைக்காத பழைய தமிழ் இலக்கியங்கள், நாவல்கள், சிறு கதைகள் தொகுப்பு, இலக்கண நூல்கள்  என பல தரப்பட்ட நூல்களை வைத்துள் ளார். அது மட்டுமின்றி பாரதியார் குறித்தான சுமார் 40 நூல்களை தன் வீட்டு  நூலகத்தில் வைத்துள்ளார் என்பது பெரும் வியப்புற்குரியதாக உள்ளது.  இன்றும் பலர் இலக்கிய சார்ந்த ஆவ ணங்களை ஆய்வு செய்வதற்கு ஏதுவாக  இவரிடம் உள்ள புத்தகங்களை பயன்  படுத்தி வருகிறார்கள் என்ற செய்தியை யும் அவர் வாயிலாக அறிந்துகொள்ள முடிந்தது.

இன்றைய காலகட்டத்தில் அரசு ஊழி யர்கள், ஆசிரியர்கள் பலர் பெரிதாக சொந்த வீடு கட்ட வேண்டும். அதில் விதவிதமான அலங்கார பொருட்களையும் கலைப்பொருட்களையும் தாங்கள் பெற்ற விருதுகளையும் சான்றிதழ் புகைப்படங் களையும் அலமாரிகளில் வைத்து அழகு  பார்க்க வேண்டும் எனவும் எண்ணு கிறார்கள். இன்னும் சிலர் எவ்வளவு பெரிய வீடு கட்டினாலும் பொருள் வைக்க இட மில்லை. பாத்திரம் வைக்க இடமில்லை குழந்தைகள் விளையாட இடம் போத வில்லை என்ற மனநிலையுடன் இருக்கும். இந்த காலகட்டத்தில் இந்த ஆசிரிய நண்  பர் தன் வீட்டின் பாதி அறைகளில பெரும்  பொருட் செலவு செய்து வாங்கிய அறி வுக்களஞ்சியங்களை அடுக்கி வைத்தி ருக்கும் காட்சியைப் பார்த்த போது உண்  மையில் அவர் மீது மதிப்பும் மரியாதை யும் உண்டானது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. கல்வியை போதிக்கும் ஆசிரியர்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் கட்டாயம் நூலகம் உருவாக்க வேண்டும். இது அவர்களின் வாசிப்பு பழக்கத்தையும் தூண்டும். மாணவர்ளுக்கு கல்வி போதிக்கும் திறனையும் மேம்படுத்தும். ”வீட்டிற்கோர் நூலகம் வேண்டும்” என்று  இன்றைய காலத்தில் அனைத்து ஆசிரி யர்களும் தங்களிடம் கல்வி பயிலும் ஒவ்வொரு மாணவனிடத்திலும் எடுத்து ரைக்க வேண்டும். அவ்வாறு ஒவ்வொரு மாணவனும் பெற்றோர்களும் தங்கள் வீடுகளில் நூலகங்களை ஏற்படுத்தும் போது தடம் மாறிச் செல்ல எத்த னிக்கும் மாணவர்களும் தங்கமாக மின்னத்  தொடங்குவார்கள்.