பென்னாகரம், டிச.9- தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பென்னாகரம் பகுதியில் கால்நடை களுக்கான கோமாரி தடுப்பூசி முகாம் நடை பெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் பென்னாகரம் கால்நடை மருத்துவமனை இணைந்து கால்நடைகளுக்கான கோமாரி தடுப்பூசி முகாம் நடத்தியது. பெரிய பள்ளத்தூரில் நடைபெற்ற இந்த தடுப்பூசி முகாமில் 100க்கும் மேற்பட்ட கால்நடை களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதேபோல் பென்னாகரம் தொகுதிக்கு உட் பட்ட பல்வேறு கிராமங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்று நூற்றுக்கணக்கான கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தப் பட்டது. முன்னதாக, இம்முகாமிற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் கே.அன்பு தலைமை வகித்தார். இதில் கால்நடை மருத்துவர் சரவணன், கால் நடை ஆய்வாளர் பாஸ்கர், உதவியாளர் தாமஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கால் நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தினர்.