districts

img

நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க வலியுறுத்தல்

ஈரோடு, ஜூலை 4- விவசாயிகளுக்கு விரோதமாக செயல்படும் ஒன்றிய பாஜக அரசு, ஒப் புக்கொண்ட கோரிக்கை களை நிறைவேற்ற மறுக் கிறது. நாடாளுமன்றத்தில் வலுவான குரல் எழுப்ப வேண்டும் என ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தியிடம் ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் மனு அளித்தனர். விவசாயிகளுக்கு விரோதமான சட்டங்களைத் திரும்பப்பெற வேண்டு மென தலைநகர் தில்லியை முற்றுகை யிட்டு ஒரு வருடத்திற்கு மேலாக விவசாயிகள் போராடினர். வேறு வழி யில்லாத மோடி அரசு பணிந்தது. விவ சாயிகளின் கோரிக்கைகள் நிறை வேற்றப்படும் என வாக்குறுதி அளித் தது. ஆனால் மோடி அரசாங்கம் விவ சாயிகளுக்கு அளித்த எந்த வாக்கு றுதிகளையும் நிறைவேற்றாமல் இந்திய விவசாயிகளை ஏமாற்றி வருகிறது. இந்நிலையில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. அதில் ஒப்புக்கொண்ட கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு நாடாளுமன்றத்தில், குரல் எழுப்ப வேண்டும் என அ.கணேசமூர்த்தியிடம், ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் சார்பில் கோரிக்கை மனுவை அளித்தனர். இச்சந்திப்பில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாநில செயற்குழு உறுப்பினர்கள் பெ.சண்முகம், கி.வெ.பொன்னையன், ஈரோடு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஏ.எம்.முனுசாமி, அ.இ.விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஆர்.விஜயராகவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

;