districts

img

ஒன்றிய அரசே! உலக வர்த்தக அமைப்பில் இருந்து வெளியேறு!!

விவசாயத்தில் இருந்து கார்ப்பரேட் நிறுவனங்களும், உலக வர்த்தக அமைப்பில் இருந்து ஒன்றிய அரசும் வெளியேற வலியுறுத்தி வெள்ளியன்று (ஆக.9) மாநிலம் முழுவதும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் ஒருபகுதியாக பல்லாவரத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தென்சென்னை புறநகர் மாவட்டச் செயலாளர் எம்.சந்திரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பெ.சண்முகம், ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பேசினர்.