பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்கள், குடும்ப வன்முறை, பாலி யல் பாகுபாடு, குழந்தைத் திருமணம் உள்ளிட்ட வற்றை தடுக்கும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 25 ஆம் தேதி சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் 90 சதவிகி தம் உறவினர்கள், நண்பர்கள், பணிபுரிகின்ற இடம் மற்றும் கல்வி கற்கும் இடங்களில் இருப்பவர்களால் ஏற்படுகிறது என பல்வேறு ஆய்வுகள் நிருபித்துள்ளது. 1960 ஆம் ஆண்டு நவம்பர் 25 ஆம் தேதி டொமினிக்கன் குடியரசில், வன் முறைக்குள்ளாகும் பெண்களுக்கு ஆதரவாக குரல் கொடுத் ததற்காக மிராபெல் சகோதரிகள் என அழைக்கப்படும் மூன்று சகோதரிகள் அந்நாட்டின் அன்றைய ஆட்சியாளர் ரஃபேல் ட்ரூஜிலோவின் உத்தரவின் பேரில் படுகொலை செய்யப்பட்டனர். மிராபெல் சகோதரிகளை உலகெங்கும் உள்ள மக் கள் ‘மறக்க முடியாத வண்ணத்துப் பூச்சிகள்’ என்று அழைத் தனர். 1979 ஆம் ஆண்டு ஐ.நா. பொதுச்சபை, பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு சர்வதேச தினத்தை அனுசரிப்ப தற்கு ஒப்புதல் அளித்ததை அடுத்து 1981 ஆம் ஆண்டு முதல் நவம்பர் 25 ஆம் தேதி ‘சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப் படுகிறது. பெண் கல்வி, பெண்களுக்கான வேலை வாய்ப்பு, பொருளாதாரம் மற்றும் சமூக ரீதியான சம உரிமை ஆகிய வற்றை உறுதி செய்திட இந்நாளில் உறுதி ஏற்போம். -செ.முத்திவீரணன்