districts

img

உடுமலை மூணாறு சாலையில் சிங்கவால் குரங்குகள் நடமாட்டம்

திருப்பூர், செப். 9- திருப்பூர் மாவட்டம் உடுமலையிலி ருந்து மூணாறு செல்லும் சாலையில் சிங் கவால் குரங்குகள் நடமாட்டம் அதிகரித் துள்ளது. இதனால் அந்த சாலையில் செல்லும் வாகனங்களை கவனமாக இயக்குமாறு வனத்துறையினர் வேண் டுகோள் விடுத்துள்ளனர்.  உடுமலையை அடுத்த ஆனை மலை புலிகள் காப்பக பகுதியில் உடு மலை மற்றும் அமராவதி வனச்சரகங் கள் உள்ளன. இங்கு யானை, புலி, சிறுத்தை, செந்நாய், காட்டெருமை, மலைப்பாம்பு, சிங்கவால் குரங்கு உள் ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.  இந்த வனவிலங்குகளுக்கு தேவை யான உணவு மற்றும் இருப்பிடத்தை மேற்கு தொடர்ச்சிமலைப் பகுதிகள் பூர்த்தி செய்து தருகிறது.  இந்த நிலையில் சில நாட்களாக  வனப்பகுதியில் சாரல் மழையுடன், அவ் வப்போது பலத்த மழை பெய்து வருகி றது. இதன் காரணமாக ஆறுகளிலும் நீர்  வரத்து அதிகரித்துள்ளது.

இதனால் வனப்பகுதியும் பசுமையாக காட்சிய ளிக்கிறது. எனினும் சிங்கவால் குரங்கு கள் அடர் வனத்திலிருந்து அடிவா ரப் பகுதியை நோக்கி வருவது அதி கரித்துள்ளது. அடர்வனப் பகுதியில் கொசுக்களின்  உற்பத்தி அதிகரித்து உள்ளதால், அவற் றின் தாக்குதலில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக விலங்குகள் அடிவா ரம் நோக்கி வருவதாக கூறப்படுகிறது. யானை, மான், காட்டெருமை, சிங்க வால் குரங்குகள் அடிவாரப் பகுதியை  நோக்கி வந்த வண்ணம் உள்ளன. இத னால் அடிவாரப் பகுதியில் முகாமிட் டுள்ள சிங்கவால் குரங்குகள் சாலை யில் விளையாடி மகிழ்ந்த வண்ணம் உள் ளன. அத்துடன் வனப்பகுதிக்குள் செல் லாமல் அங்குள்ள மரங்களில் தஞ்சம் அடைந்துள்ளன. மேலும் கடந்த சில நாட்களாக அடி வாரப் பகுதியில் வனவிலங்குகள் நட மாட்டம் காணப்படுகிறது. இதனால் அத் தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்கள் சாலையில் வன விலங்குகள் நடமாட்டம் இருந்தால் அவை சாலையைக் கடக்கும் வரை யில் பொறுமை காத்து செல்ல வேண் டும். வனவிலங்குகளை துன்புறுத்து வது, அவை மிரட்சி அடையும் வகை யில் ஒலி எழுப்புவது உள்ளிட்ட செயல்க ளில் வாகன ஓட்டிகள் ஈடுபடக்கூடாது என வனத் துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

;