கோவை, டிச.5- கோவையில் இயங்கி வரும் தனி யாருக்குச் சொந்தமான நூற்பாலை யில் இளம்பெண்ணை தாக்கிய சம்ப வம் தொடர்பாக இருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். கோவை சரவணம்பட்டி பகுதியில் இயங்கி வரும் கற்பகம் ஸ்பின்னிங் மில் என்ற நூற்பாலையில் தமிழகம் மற்றும் வட மாநிலங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் பணி புரிந்து வருகின்றனர். இந்நிலையில் இளம்பெண் ஒருவரை இரு ஆண் கள் மற்றும் பெண் ஊழியர் கட்டை யால் தாக்க முற்படுவதும், வலி தாங்கா மல் இளம் பெண் கதறி அழும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங் களில் வைரலானது. இதுதொடர்பாக சரவணம்பட்டி காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், தாக்குதலுக்கு ஆளான அந்த பெண் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் என்றும், 22 வயதுடைய அவர் கடந்த மூன்று மாதங்களாக கற்பகம் நூற்பாலையில் பணி புரிந்து வருவ தும் தெரியவந்துள்ளது. இந்நிலையில், கடந்த 27 ஆம் தேதி வேலைக்கு செல்ல அந்த இளம்பெண் மறுத்ததாக கூறப்படுகி றது, இதனையடுத்து நூற்பாலையின் மனிதவள மேம்பாட்டு மேலாளர் முத்தையா மற்றும் விடுதி காப்பாளர் லதா ஆகியோர் அப்பெண்ணை தாக்கியுள்ளனர். மேலும் மேலாளர் முத்தையா அந்தப்பெண்ணை கட்டை யால் தாக்கியவுடன், ஆபாச வார்த்தை களால் திட்டியுள்ளார். இதனால் அந்தபெண் வலி தாங்கமால் கத றும் காட்சிகள் மற்றும் மேலாளர் தாக்கி எட்டி உதைக்க முற்படும் காட்சிகளை பதிவு செய்த ஊழியர் ஒருவர் அதை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள் ளது விசாரணையில் தெரியவந்தது. இதனை அடுத்து சம்பவம் தொடர் பாக சரவணம்பட்டி காவல்துறை யினர் விடுதி காப்பாளர் லதா மற்றும் மேலாளர் முத்தையா ஆகிய இருவ ரையும் கைது செய்துள்ளனர். மேலும் இருவர் மீதும் பெண்கள் வன் கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.