districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

தோழர் ஈ.தமிழரசு காலமானார்

திருப்பூர், நவ.5– தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஒன்றுபட்ட கோவை  மற்றும் திருப்பூர் மாவட்ட செயலாளராக பணியாற்றிய தோழர் ஈ.தமிழரசு காலமானார். பல்லடம் வட்டம், கே.அய்யம்பாளையம் கிராமம், முத்தாண்டிபாளையத்தைச் சேர்ந்த தமிழரசு விவசாயிகள் சங்கத்தின் கோவை மாவட்ட செயலாளராக பணியாற்றி னார். அப்போது, சின்னாம்பதி மலைவாழ் மக்களிடம் வனத் துறையினர் அத்துமீறல் செய்து அடக்குமுறையை ஏவிவிட்ட போது, அம்மக்கள் பிரச்சனையை வெளி உலகுக்கு கொண்டு  வந்ததில் முக்கியப் பங்காற்றியவர் ஆவார். முழு நேர ஊழிய ராக சில காலம் செயல்பட்டார். மார்க்சிஸ்ட் கட்சியின்  கோவை மற்றும் திருப்பூர் மாவட்டக்குழு உறுப்பினராகவும் ஈ. தமிழரசு செயல்பட்டார். கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவாக இருந்த நிலையில் மருத்துவ சிகிச்சை பலன ளிக்காமல் அவர் வெள்ளியன்று பிற்பகல் 2 மணியளவில் உயிரிழந்தார்.  இதுகுறித்து தகவலறிந்த விவசாயிகள் சங்கத்தின் பல்லடம் ஒன்றிய தலைவர் கே.வி.சுப்பிரமணியம், ஒன்றிய செயலாளர் வை.பழனிச்சாமி, ஒன்றிய பொருளாளர் எஸ். லோகநாதன், பருவாய் ஜோதிபாசு, கரடிவாவி முருகசாமி, அக்ரி பிரகாஷ், ஏ.கே.செந்தில்குமார், புளியம்பட்டி மணி மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் ஆர்.பரம சிவம் ஆகியோர் அவரது உடலுக்கு மலரஞ்சலி செலுத் தினர். மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே. காமராஜ், திருப்பூர் மாவட்ட செயலாளர் செ.முத்துக் கண்ணன் உட்பட கட்சி அணியினர், விவசாயிகள் சங்கத் தினர் அவரது வீட்டிற்குச் சென்று அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தனர். தோழர் தமிழரசு-க்கு மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

கஞ்சா பறிமுதல்: இருவர் கைது

ஈரோடு, நவ. 5- அரச்சலூர் அருகே வாகன தணிக்கையின் போது பிடி பட்டவர்களிடம் 20.900 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப் பட்டது. ஈரோடு மாவட்டம், அரச்சலூர் காவல் நிலைய உதவி  ஆய்வாளர் ரவீந்திரன் தலைமையிலான காவல்துறையினர் ஈரோடு- காங்கயம் ரோடு அவல்பூந்துறை நால் ரோட்டில் வெள்ளியன்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இரு சக்கர வாகனத்தில் மூன்று நபர்கள் வந்தனர். அவர்கள் காவல்துறையினரைக் கண்டதும் வண்டியை  திருப்பிக் கொண்டு தப்பிக்க முயன்றனர். ஆனால் காவல் துறையினர் மடக்கி பிடிக்க முயன்ற போது இரு சக்கர வாக னத்தில் இருந்து குதித்த இரு நபர்களை மடக்கி பிடித்தனர்.  வாகனத்தை ஓட்டி வந்த நபர் வண்டியுடன் தப்பினர். பிடிபட்டவர்களில் ஒருவரிடம் விசாரித்த போது ஈரோடு  விவிசிஆர் நகரைச் சேர்ந்த அஜீத்குமார் (22) மற்றும்  அக்ரஹார வீதியைச் சேர்ந்த பக்கீர் மைதீன் ஜமீர் (23) என்றும்  தங்களுடன் வந்தவர் கணேசன் என்றும் தாங்கள் பாலா,  கணேசன் என்பவர்களிடம் கஞ்சாவை வாங்கி, விற்பனை  செய்வதாக குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார். அவர் களைக் கைது செய்து அவர்கள் அடையாளம் காட்டிய பாலா  என்பவரை விசாரித்துள்ளனர். அவரும் தனது குற்றத்தை  ஒப்புக் கொண்டதால் கைது செய்யப்பட்டுள்ளார்.  அத்துடன் அங்கு 11 பாக்கெட்டுகளில் இருந்த சுமார் 21  கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.2லட்சத்து 10 ஆயிரம் ஆகும். தலைமறைவான கணேசனை  அரச்சலூர் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

மஞ்சள் விலை உயர்வு; விவசாயிகள் மகிழ்ச்சி

ஈரோடு, நவ.5- ஈரோடு மார்க்கெட்டுகளில் மஞ்சள் விலை  உயர்ந்து குவிண்டலுக்கு ரூ.8 ஆயிரத்து 259க்கு விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  ஈரோடு மாவட்டத்தில் தான் அதிகப்படி யான மஞ்சள் விளைகிறது. இதனால் ஈரோடு  மஞ்சள் நகரம் என்று அழைக்கப்படுகிறது.  ஈரோடு மாவட்டத்தில் 4 இடங்களில் மஞ்சள்  மார்க்கெட்டுகள் செயல்பட்டு வருகிறது. இங்கு சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை  மற்றும் விடுமுறை நாட்களை தவிர மற்ற  நாட்களில் மஞ்சள் ஏலம் நடந்து வருகிறது. வெள்ளியன்று நடந்த ஏலத்தில் மஞ்சள் குவிண்டாலுக்கு ரூ.100 முதல் ரூ.300  வரை விலை உயர்ந்துள்ளது.  இந்நிலையில் பெருந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு 843 மஞ்சள் மூட்டைகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் விரலி  மஞ்சள் குவிண்டால் ஒன்றுக்கு குறைந்த பட்சமாக ரூ.5 ஆயிரத்து 799 -க்கும், அதிகபட்சமாக ரூ.8 ஆயிரத்து 129-க்கும், கிழங்கு மஞ்சள் குவிண்டால் ஒன்று குறைந்த பட்சமாக ரூ.5 ஆயிரத்து 280-க்கும், அதிகபட்ச மாக ரூ.6ஆயிரத்து 839-க்கும் விற்பனை ஆனது. மொத்தம் 797 மஞ்சள் மூட்டைகள் ஏலம் போனது.  ஈரோடு ஒழுங்கு முறை விற்பனை கூடத் திற்கு 2 ஆயிரத்து 19 மஞ்சள் மூட்டைகள் விற்பனைக்கு வந்தன. இதில் விரலி மஞ்சள்  குவிண்டால் குறைந்தபட்சமாக ரூ.5 ஆயி ரத்து 729-க்கும், அதிகபட்சமாக ரூ.8 ஆயிரத்து 259-க்கும், கிழங்கு மஞ்சள் குறைந்தபட்சமாக ரூ.5 ஆயிரத்து 369-க்கும்,  அதிகபட்சமாக ரூ.6 ஆயிரத்து 802-க்கும் ஏலம் போனது. 728 மஞ்சள் மூட்டைகள் விற்பனை ஆனது.  ஈரோடு வேளாண்மை உற்பத்தி யாளர்கள் கூட்டுறவு விற்பனை கூடத்திற்கு  329 மஞ்சள் மூட்டைகளை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இதில் விரலி மஞ்சள் குவிண்டால் ஒன்றுக்கு  குறைந்தபட்சமாக ரூ.5 ஆயிரத்து 739-க்கும், அதிகபட்சமாக ரூ.8 ஆயிரத்து 210-க்கும், கிழங்கு மஞ்சள் குறைந்தபட்சமாக ரூ.5 ஆயிரத்து 399-க்கும், அதிகபட்சமாக ரூ.6  ஆயிரத்து 959-க்கும் விற்பனையானது.  விவசாயிகள் கொண்டு வந்ததில் 297  மூட்டை மஞ்சள் ஏலம் போனது.  கோபி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்திற்கு 146 மஞ்சள்  மூட்டைகள் கொண்டு வரப்பட்டு அனைத்து  மூட்டைகளும் ஏலம் போனது. விரலி மஞ்சள்  குவிண்டால் ஒன்றுக்கு குறைந்தபட்சமாக ரூ.6 ஆயிரத்து 83-க்கும், அதிகபட்சமாக ரூ.6  ஆயிரத்து 899-க்கும், கிழங்கு மஞ்சள் குறைந்தபட்சமாக ரூ.6 ஆயிரத்து 274-க்கும்,  அதிகபட்சமாக ரூ.6 ஆயிரத்து 375-க்கும்  ஏலம் போனது. மஞ்சள் விலை உயர்ந்த தால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள் ளனர்.

தொழிலாளி கொலை 

கோவை, நவ.5 - கோவை கணபதி பகுதி யில் தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவத்தை  கண்காணிப்புகேமரா  காட்சிகளை கொண்டு போலீ சார் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். கோவை, கணபதி ராஜ  வீதியைச் சேர்ந்தவர் வெங்கட் என்கின்ற வெங்க டேஷ் (53). இவர் கணபதி  சங்கனூர் சாலையில் புதிய தாக திறக்கப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தின் முன் புற வாசலில் இறந்தநிலை யில் கிடந்துள்ளார்.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சரவணம்பட்டி காவல்துறை யினர் உடலை கைப்பற்றி  விசாரணை மேற்கொண் டதில் சில நபர்கள் வெங்க டேஷை பலமாக தாக்கி  அடித்துக் கொலை செய் துள்ளது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செயத காவல் துறையினர், கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு விசாரித்து வருகின்றனர்.  

நூதன முறையில் மோசடி: ரூ. 4.50 லட்சம் மீட்பு

தருமபுரி, நவ.5- தருமபுரியில் நூதன முறையில் வங்கிக்  கணக்கிலிருந்து மோசடியால் இழந்த ரூ.  4.50 லட்சத்தை சைபர் குற்றப் பிரிவு போலீ சார் வெள்ளியன்று மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர். தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவர் ஒருவரின் கைப்பேசிக்கு வங்கிக்  கணக்கில் சில விவரங்களை பதிவேற்றம்  செய்ய வேண்டும் எனக் கூறிய அடையாளம்  தெரியாத நபர்கள், அவரிடம் இருந்து வங்கிக்  கணக்கு எண், கடவுச் சொல் ஆகிவற்றை  பெற்றுள்ளனர். பின்னர், அவரது கணக்கி லிருந்து உடனடியாக ரூ. 4 லட்சத்து 70  ஆயிரத்து 829 எடுத்துள்ளனர். இதுகுறித்து மாவட்ட சைபர் குற்றப் பிரிவு  போலீசாருக்கு அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில், நூதன  முறையில் மோசடி செய்து எடுக்கப்பட்ட ரூ.4 லட்சத்து 46 ஆயிரத்து 40 மீட்டு  பறிகொடுத்தவரிடம் ஒப்படைத்தனர். வங்கிகளிலிருந்து பேசுவதாகக் கூறி  வரும் இத்தகைய மோசடியான அழைப்பு களை நம்பி, யாரிடமும் தங்களது கணக்கு விவரங்களை பகிர வேண்டாம் எனவும், இத்தகைய பண மோசடி தொடர்பாக 1930  என்ற சைபர் குற்றத்தடுப்புப் பிரிவு உதவி  எண்ணை உடனடியாகத் தொடர்பு கொண்டு  புகார் தெரிவிக்கலாம் எனவும் சைபர் குற்றப்  பிரிவு போலீசார் அறிவுறுத்தினர்.

ஈரோடு மாவட்ட ஆட்சியரக பொருட்கள் ஜப்தி?

பேச்சுவார்த்தையால் ஒத்தி வைப்பு

ஈரோடு, நவ. 5- ஈரோடு மாவட்ட ஆட்சியரகத்தி  லுள்ள கணினிகள் மற்றும் பர்னிச்சர் களை ஜப்தி செய்ய நோட்டீஸ் வழங்கப் பட்டுள்ளது. ஈரோடு, கொல்லம்பாளையம் பகுதியில் வீட்டு வசதி வாரியம் சார்பில்  குடியிருப்புகள் கட்டுவதற்காக அந்தப்  பகுதியைச் சேர்ந்த கே.பி.நடராஜன், குப்பு விஜயன், தட்சிணாமூர்த்தி, அனிதா, தினேஷ்குமார், மணிமேகலை,  லட்சுமி நாராயணன், சிந்து ஆகிய எட்டு பேருக்குச் சொந்தமான 5.45 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்துவதற்காக, அவர்களுக்கு 1984ஆம் ஆண்டு நோட்டீஸ் வழங்கப்பட்டு, 1986ஆம் ஆண்டு அவர்களது நிலம் கையகப் படுத்தப்பட்டது. இதற்காக, அரசுத் தரப்பிலிருந்து வழங்கிய தொகை குறை வாக இருப்பதால், கூடுதல் தொகை வழங்கக் கோரி, ஈரோடு சார்பு நீதி மன்றத்தில் எட்டுப் பேரும் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசா ரித்த நீதிபதி, ஏக்கர் ஒன்றுக்கு கூடுத லாக ரூ.3,05,900 வீதம் வழங்க உத்தர விட்டார்.  இந்தத் தொகையும் சந்தை மதிப்பைவிட மிகவும் குறைவாக இருந் ததால், மீண்டும் கூடுதல் தொகை வழங்கக் கோரி சென்னை உயர் நீதி மன்றத்தில் எட்டுப் பேரும் மேல் முறை யீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம்,  விலையை உயர்த்தி அசலும், வட்டியும்  சேர்த்து மொத்தம் 78,73, 635 ரூபாயை  இந்த எட்டு நில உரிமையாளர்களுக்கும்   வழங்குமாறு தீர்ப்பளித்தது. இந்தத் தொகையை வழங்க மறுப்பு  தெரிவித்து, அரசு தரப்பில் உச்ச நீதி மன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சென்னை உயர் நீதிமன்றம் கூறிய தீர்ப்பு செல்லும் எனக் கூறி அரசுத் தரப்பில் தொடரப்பட்ட அந்த வழக்கைத் தள்ளுபடி செய்தது.   அதன் பிறகும் பாதிக்கப்பட்டவர் களுக்கு உரிய தொகை வழங்க தாமதம்  செய்ததால், கட்டளை நிறைவேற்று மனு ஈரோடு முதலாம் கூடுதல் சார்பு  நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டது. இதனையடுத்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள 50 கம்ப்யூட்டர்கள், 50  டைப் ரைட்டிங் மெஷின்கள், 50 இரும்பு பீரோக்கள், 100  சீலிங் ஃபேன்கள், 200 மர மேஜைகள், 200 இரும்பு மேஜைகள், 500 சேர்கள், 4 லிஃப்ட்டுகள் ஆகியவற்றை ஜப்தி செய்ய ஈரோடு முதலாம் கூடுதல் சார்பு  நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து நீதிமன்ற அமினா ரவிகுமார் உள்ளிட்ட நீதிமன்ற ஊழியர் கள் ஜப்தி செய்வதற்கான நோட்டீஸை  மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவி யாளரிடம் வழங்கினர். இதனையடுத்து நீதிமன்ற ஊழியர்களும், வழக்கறி ஞரும், ஆட்சியரின் நேர்முக உதவி யாளரிடம் பேச்சுவார்த்தையில் ஈடு பட்டனர். இதில் சற்று கால அவகாசம்  அளிக்குமாறு கேட்டதால் ஜப்தி  நடவடிக்கையை நிறுத்தி வைக்கப் பட்டது.

காலமானார் ஈ.தமிழரசு

திருப்பூர், நவ. 5 – தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஒன்றுபட்ட கோவை  மற்றும் திருப்பூர் மாவட்டச் செயலாளராக பணியாற்றிய ஈ.தமிழரசு காலமானார். பல்லடம் வட்டம் கே.அய்யம்பாளையம் கிராமம் முத் தாண்டிபாளையத்தைச் சேர்ந்த தமிழரசு, விவசாயிகள் சங்கத் தின் கோவை மாவட்டச் செயலாளராக பணியாற்றியபோது, சின்னாம்பதி மலைவாழ் மக்களிடம் வனத்துறையினர் அத்து மீறல் செய்து அடக்குமுறையை ஏவிவிட்ட சம்பவத்த வெளி  உலகுக்கு கொண்டு வந்து நீதி கிடைக்க முக்கியப் பங்காற்றி யவர் ஆவார். அவர் முழு நேர ஊழியராக சில காலம்  செயல்பட்டிருக்கிறார். மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மற் றும் திருப்பூர் மாவட்டக்குழு உறுப்பினராகவும் அவர் இருந் திருக்கிறார்.  அவருக்கு மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவாக இருந்த நிலை யில் மருத்துவ சிகிச்சை பலனளிக்காமல் அவர் வெள்ளியன்று  பிற்பகல் 2 மணியளவில் உயிரிழந்தார். தகவல் அறிந்து விவசா யிகள் சங்கத்தின் பல்லடம் ஒன்றியத் தலைவர் கே.வி.சுப் பிரமணியம், ஒன்றியச் செயலாளர் வை.பழனிச்சாமி, ஒன்றி யப் பொருளாளர் எஸ்.லோகநாதன், பருவாய் ஜோதிபாசு,  கரடிவாவி முருகசாமி, அக்ரி பிரகாஷ், ஏ.கே.செந்தில்குமார்,  புளியம்பட்டி மணி மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றியச்  செயலாளர் ஆர்.பரமசிவம் ஆகியோர் அவரது உடலுக்கு மல ரஞ்சலி செலுத்தினர். மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காம ராஜ், திருப்பூர் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் உள்பட கட்சி அணியினர், விவசாயிகள் சங்கத்தினர் அவரது  வீட்டிற்குச் சென்று அவரது குடும்பத்தாருக்கு அனுதாபம் தெரிவித்தினர்.

60 வயது மதிக்கத்தக்க பெண் மரணம்

தாராபுரம்,  நவ. 5 - தாராபுரம் தாலுகா அலுவலகம் அருகே உள்ள பேருந்து  நிறுத்தத்தில் 60 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத  பெண் பிணமாக கிடந்தார்.  இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து கிராம நிர் வாக அலுவலருக்கு  தகவல் கொடுத்தனர். அவர் தாராபுரம்  போலீசாருக்கு தெரிவித்தார். அதன் பேரில் காவல் ஆய்வா ளர் மணிகண்டன் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தியதில்  தாராபுரம், தென் தாரை பெரிய காளியம்மன் கோவில் பகுதி  தண்டபாணி என்பவரது மனைவி பாரதி, இவர் மனநலம்  பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து  உடலை பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம்  ஒப்படைக்கப்பட்டது.

வரலாற்று சிறப்புமிக்க ஆவணங்களை பற்றி ஆவணக் காப்பகத்திற்கு தெரிவிக்க அழைப்பு

திருப்பூர், நவ. 5- வரலாற்று சிறப்புமிக்க பழமை யான ஆவணங்கள் பற்றிய விவரங் களை கோவை மாவட்ட ஆவணக்காப்ப கத்திற்கு தகவல் தெரிவிக்குமாறு மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் கேட்டுக் கொண்டுள்ளார். பேரூர் சாதலிங்க அடிகளார் தமிழ் கல்லூரிக்கு எதிரில், அரசு ஆவணங் களை பாதுகாத்து வரும் பெட்டகமாக கோவை மாவட்ட ஆவணக்காப்பகம் செயல்பட்டு வருகிறது. நாட்டின் முழுமையான வரலாற்றை  அறிவதற்கு அரசின் ஆவணங்கள் மட் டும் இன்றி தனியார் நிறுவனங்கள், கோவில்கள், கல்வி நிறுவனங்கள், பொதுநல அமைப்புகள்ஆகியவற்றின் வசமுள்ள ஆவணங்களும் ஆராயப்பட  வேண்டும் என்ற நோக்கத்தில் தனிநபர்,  மத அமைப்புகள், கோவில்கள், மசூதி கள், கிறிஸ்தவ ஆலயங்கள், விடுத லைப் போராட்ட வீரர்கள், ஜமீன்தார்கள் மற்றும் சமஸ்தானங்களிடமிருந்தும் தனியார் ஆவணங்கள் சேகரிக்கப் பட்டு வருகின்றன. இந்திய சுதந்திர போராட்ட காலத் தில் சுதந்திரத்திற்காக பாடுபட்ட வீரர் கள் தங்கள் வாழ்ந்த இடங்களில் நடந்த  சம்பவங்கள் குறித்து காந்தி, நேரு  போன்ற முக்கிய தலைவர்களுக்கு கடி தங்கள் வாயிலாக தெரிவித்திருப்பின்,  அத்தலைவர்களிடமிருந்து வீரர்க ளுக்கு பதில் கிடைக்கப் பெற்றிருக்கும்.  

இக்கடிதங்கள் பாதுகாக்கப்பட்டால்  இந்திய சுதந்திரப் போர் பற்றி அறிய பயன்படும். ஆங்கிலேய ஆட்சியின்போது ஜமீன்தார்கள் மற்றும் ஆங்கிலேய ருக்கு இடையே கடிதப் போக்குவரத்து நடைபெற்றிருக்கும். அப்படிப்பட்ட ஜமீன்தார்களின் சந்ததிகள் தம் மூதா தையர்கள் விட்டுச்சென்ற் வாழ்க்கை குறிப்புகள், காலக்குறிப்புகள் மற்றும்  கடிதப் போக்குவரத்துகள் நாட்டின் ஒரு  பகுதியின் வரலாற்றை வெளிக்கொணர  பேருதவியாக இருக்கும்.  இந்து, கிறிஸ்தவர் மற்றும் முஸ் லிம்கள் தங்கள் கோவில் பற்றிய புரா ணங்கள், வரலாற்று குறிப்புகள் புத்தக  வடிவிலோ, செப்பு பட்டயங்களா கவோ, கிடைக்கப் பெற்றால் அவை  சமய வழிபாடு பற்றி அறிய பேருத வியாக இருக்கும். தங்களால் அனுப்பப்படும் ஆவ ணங்கள் விஞ்ஞான ரீதியாக செப்ப னிட்டும், ஸ்கேன் செய்து கணினியில்  பதியப்பட்டும் மற்றும் மைக்ரோஃபிலிம் எடுத்தும் கோவை மாவட்ட ஆவண காப்பகத்தில் பாதுகாப்புடன் அது பற்றி விவரங்கள் ஆராய்ச்சியாளர்க ளுக்கு பயன்படும் வகையில் தேசிய  தனியார் ஆவணங்கள் பதிவேட்டின் பதிந்து வைக்கப்படும் என்று தெரிவிக் கப்படுகிறது. எனவே, தங்களிடம் உள்ள பழமை  வாய்ந்த பயனுள்ள ஆவணங்களை பாதுகாக்கவும், ஆராய்ச்சியாளர்கள் பயன்பாட்டிற்கு ஏதுவாக, உதவி  ஆணையர், மாவட்ட ஆவணக்காப்ப கம், சாந்தலிங்க அடிகளார் தமிழ் கல் லூரி எதிரில், சிறுவானி மெயின் ரோடு,  பேரூர், கோவை - 641010. தொலைபேசி:  0422 - 2609474. என்ற முகவரியிலும், drc cbe@gmail.com என்ற மின்னஞ்சலி லும் ஆவணங்கள் அல்லது அது பற்றிய  விவரங்களை அனுப்பி வைக்கவும் என ஆட்சியர் எஸ்.வினீத் கூறியுள் ளார்.

நிற்காமல் சென்ற தனியார் பேருந்தை சிறைப்பிடித்த பொதுமக்கள்

அவிநாசி, நவ.5- தெக்கலூர் பேருந்து நிறுத்ததில் நிற்கா மல் சென்ற தனியார் பேருந்தை பொது மக்கள் வெள்ளிக்கிழமை சிறைப்பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவிநாசி அருகே தெக்கலூரில் தனியார்,  அரசுப் பேருந்துகள் பேருந்து நிறுத்ததில்  நிற்காமல் புறவழிச்சாலை மேம்பாலத்தி லேயே சென்று வருவதால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலை யில் வெள்ளிக்கிழமை மாலை கல்லூரி மாண வர்கள் தெக்கலூர் செல்வதற்காக கோவை யில் இருந்து திருப்பூர் நோக்கி சென்ற தனி யார் பேருந்தில் ஏறியுள்ளனர்.  ஆனால் பேருந்து தெக்கலூர் பேருந்து நிறுத்ததில் நிற் காமல், மாணவர்களை நத்தக்காட்டு பிரிவில்  இறக்கி விட்டு சென்றுள்ளனர். இதையடுத்து மாணவர்கள் தகவலை கைப்பேசி மூலம் பெற்றோர் மற்றும் பொதுமக்களிடம் தெரி யப்படுத்தியுள்ளனர். தெக்கலூர் புறவழிச் சாலையில் காத்திருந்த பொதுமக்கள் பேருந்தை சிறைப்பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு  சென்ற அவநாசி போலீஸார் பேச்சுவார்த்தை  நடத்தி பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்து நர்களை எச்சரித்தனர். இதையடுத்து, பேருந்து ஓட்டுநரும், நடத்துநரும் இனி வரும் காலங்களில் தெக்க லூர் பேருந்து நிறுத்தத்தில் பேருந்தை  நிறுத்திச் செல்வதாக உறுதியளித்தனர். இதையடுத்து, பொதுமக்கள் பேருந்துகள் விடுவித்தனர்.

14 மாதங்களில் 254 நகரப் பேருந்துகளில் 6.85 கோடி மகளிர் கட்டணமில்லா பயணம்

திருப்பூர், நவ.5- திருப்பூா் மாவட்டத்தில் கடந்த 14 மாதங்களில் 254 நகரப்  பேருந்துகளில் 6.85 கோடி மகளிர் கட்டணமில்லா பயணம்  மேற்கொண்டுள்ளனர். தமிழகம் முழுவதும் அரசுப் போக்குவரத்துக் கழக  கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண நகரப் பேருந்துகளில் பணிபுரியும் மகளிர், உயர் கல்வி பயிலும் மாணவியர், திரு நங்கைகள், மாற்றுத் திறனாளிகளுக்கு கட்டணமில்லா பயண  வசதி திட்டத்தில் திருப்பூர், பல்லடம், காங்கயம்,  தாராபுரம், உடுமலை பணிமனைகளில் இருந்து இயக்கப்பட்ட  254 நகரப் பேருந்துகளில் கடந்த 2021 ஜூலை முதல் 2022  செப்டம்பர் வரையில் 6 கோடியே 81 லட்சத்து 59 ஆயிரத்து  815 மகளிர்களும், 3 லட்சத்து 69 ஆயிரத்து 502 மாற்றுத் திற னாளிகளும், 25 ஆயிரத்துக்கு 877 மாற்றுத் திறனாளிகளின் உத வியாளர்களும், மூன்றாம் பாலினத்தவர் 38 ஆயிரத்து 186 பேரும் கட்டணமில்லா பயணம் மேற்கொண்டுள்ளதாக தெரி விக்கப்பட்டுள்ளது.

உடுமலை அணைகளின் நிலவரம்

திருமூர்த்தி அணை  நீர்மட்டம்:46.53/60அடி  நீர்வரத்து:964கன அடி வெளியேற்றம்:1044கன அடி மழையளவு:21மிமீ அமராவதி அணை  நீர்மட்டம்: 83.60/90அடி. நீர்வரத்து:2078கனஅடி வெளியேற்றம்:333கன அடி மழையளவு:5மிமீ

கோவையில் ஐஎஸ்ஐஎஸ் இயக்க ஆதரவான 50 இளைஞர்கள் கண்டுபிடிப்பு

கோவை, நவ.5- கோவையில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்திற்கு ஆதரவாக உள்ள 50 இளைஞர்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களை நல்வழிப்படுத்த சிறப்பு பயிற்சிகள் அளிக்கப் பட உள்ளதாக கோவை மாநகர காவல் ஆணையர் வி.பால கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கோவை கோட்டைமேடு பகுதியில் கடந்த அக்.23 ஆம் தேதியன்று நடைபெற்ற கார் வெடிப்பு சம்பவத்தில் முபின் என்பவர் உயிரிழந்தார். இதையடுத்து நடைபெற்ற விசார ணையில், முபின் ஐஎஸ்எஸ் (ISIS) தீவிரவாத இயக்கத் திற்கு ஆதரவாளராக செயல்பட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து உளவுத்துறை போலீசார் முபினை போல ஐஎஸ் ஐஎஸ் இயக்கத்திற்கு ஆதரவாக செயல்படும் இளைஞர்கள் உள்ளனரா? என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், கோவை மாவட்டம் முழுவதும் 50 இளைஞர்கள் ஐஎஸ் ஐஎஸ் இயக்கத்தின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு, அவர்க ளுக்கு ஆதரவாக இருப்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் யார்? என்ற விபரங்கள் அனைத்தையும் உளவுத்துறை போலீ சார் சேகரிக்க தொடங்கினர். தற்போது இந்த இளைஞர்களை கண்டுபிடித்துள்ள போலீசார் அவர்களை நல்வழிப்படுத்துவ தற்காக சிறப்பு பயிற்சிகள் அளிக்க முடிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையர் வி.பாலகிருஷ்ணன் கூறுகையில், கோவையில் கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தீவிரமாக விசாரணை நடந்தது. அந்த விசாரணையில் தான் மாவட்டம் முழுவதும் 50 வாலிபர் கள் ஐஎஸ்ஐஎஸ் கருத்துகளால் ஈர்க்கப்பட்டு, ஆதரவாக இருப்பது தெரியவந்தது. அந்த இளைஞர்களுக்கு உலமாக் கள், உளவியல் நிபுணர்கள் மூலமாக நல்வழி பயிற்சி  வழங்க முடிவு செய்துள்ளோம். இதற்காக பிரத்யோகமாக ஒரு திட்டத்தையும் தொடங்க உள்ளோம். அந்த திட்டத்தில் இளை ஞர்களை பங்கு பெற வைத்து, அவர்களை அதிலிருந்து மீட்டு  கொண்டு வருவது, தவறான செயல்களில் ஈடுபடக்கூடாது என்ற கருத்துக்களை போதிக்க உள்ளோம். இதனை விரை வில் மேற்கொள்வோம், என்றார்.

நெடுஞ்சாலையில் வாகனங்களை நிறுத்துவதால் விபத்து அபாயம்

உதகை, நவ.5- உதகை - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங் கள் நிறுத்தி தண்ணீரில் கழுவுவ தால் விபத்து அபாயம் இருப்பதாக வாகன ஓட்டிகள் குற்றஞ்சாட்டி உள் ளனர். நீலகிரி மாவட்டம், உதகைக்கு கர்நாடகா, கேரளா மாநிலங்களி லிருந்து கூடலூர் வழியாகவும், கோவை உட்பட தமிழகத்தின் மற்ற  மாவட்டங்களிலிருந்து குன்னூர், கோத்தகிரி சாலை வழியாகவும் வாக னங்கள் சென்று வருகின்றன. இதில்  உதகை – குன்னூர் - மேட்டுப்பாளை யம் சாலை முக்கியத்துவம் வாய்ந்த தாக கருதப்படுகிறது. குறிப்பாக,  சீசன் காலங்களில் ஆயிரக்கணக் கான வாகனங்கள் படையெடுத்து வருவதால், குன்னூர் சாலை ஒரு வழி பாதையாக மாற்ற வேண்டிய சூழ் நிலை உள்ளது. இதைத்தொடர்ந்து விபத்து ஏற் படுவதை தவிர்க்கவும், மற்ற சாலை களில் தடை ஏற்பட்டால் முன்னெச்ச ரிக்கை நடவடிக்கையாக இருக்கும் வகையிலும், உதகை – குன்னூர் -  மேட்டுப்பாளையம் சாலையை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப் பட்டது. இந்த பணிகள் கடந்த ஓராண் டுக்கு முன்னர் தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கி டையே விபத்துகளை குறைப்பதற் காக சாலையை அகலப்படுத்தும் பணிகள் ஒரு பக்கம் நடந்தாலும் சாலையோரம் கனரக வாகனங் களை நிறுத்தி கழுவுவதால் விபத்து ஏற்படும் வாய்ப்பு அதிகரித்துள்ள தாக வாகன ஓட்டிகள் குற்றஞ்சாட்டி யுள்ளனர். இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், உதகை - மேட்டுப் பாளையம் சாலையில் குன்னூரிலி ருந்து பர்லியாறு வரை சாலையோ ரம் நீரூற்றுகள் இருக்கும் இடங் களில், கனரக வாகனங்களை நிறுத்தி கழுவுகின்றனர். செங்குத்தான மேடு, வளைவுகள் நிறந்த மலைப்பாதை யில் வாகனங்களை நிறுத்தி சுமார் ஒரு மணி நேரம் வரை கழுவிக் கொண்டு இருப்பதால் போக்கு வரத்து நெரிசல் ஏற்படுகிறது. முக்கிய மாக, வாகனங்களை முந்தி செல்ல  முயலும் போது விபத்து ஏற்படும்  அபாயம் உள்ளது. மலைப்பிரதேசம் என்பதால் அந்த இடத்தில் வாகனங் களை நிறுத்திக் கழுவ தடை விதிக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவ டிக்கை எடுக்க வேண்டும், என கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறுகையில், 100 ஆண்டுகளுக்கு முன்னர் ஆங்கிலே யர்களால் உருவாக்கப்பட்ட பாரம் பரியமிக்க இந்த வழித்தடம் கால மாற்றத்திற்கு ஏற்ப தற்போது விரி வாக்கம் செய்யப்படுகிறது. இதன் படி ரூ.62 கோடியில் விரிவாக்க பணி கள் முடியும் தருவாயில் உள்ளது. சாலையை அகலப்படுத்தும் பணி கள் மட்டும் தான் நெடுஞ்சாலைத் துறையின் கீழ் வரும். வாகனங்களை நிறுத்தி கழுவுவதால் விபத்து மற் றும் சட்டம் - ஒழுங்கு பிரச்சனை என் பதால் இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை ரோந்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

மின்தடை

ஈரோடு, நவ.5- ஈங்கூர் துணை மின் நிலை யத்தில் மாதாந்திர பராம ரிப்பு பணி நவ.8 ஆம் தேதி  நடைபெற உள்ளது. இத னால் பெருந்துறை கோட் டத்தைச் சார்ந்த பெருந்துறை தெற்கு பகுதி, கொங்கு காலேஜ், நந்தா காலேஜ், மூலக்கரை, வெள்ளோடு, கவுண்டச்சிபாளையம், ஈங் கூர், பாலப்பாளையம், மு. பிடாரியூர் வடக்குப்பகுதி, வேலாயுதம்பாளையம், 1010 நெசவாளர் காலனி, பெருந்துறை ஆர்.எஸ், பெருந்துறை ஹவுசிங்யுனிட் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5  மணி வரை மின் விநியோ கம் இருக்காது என தெரி விக்கப்பட்டுள்ளது.

 

 

;