நாமக்கல், ஜூலை 8- நாமக்கல் மாவட்ட தேசிய பசுமை படை சார் பாக 300 மரக்கன்றுகள் நடும் நிகழ்வு சேந்தமங்கலம் தொகுதி முத்துக்காப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி பள்ளியில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு, பள்ளி தலைமை ஆசிரியர் த.இளங் கோவன் தலைமை ஏற்றார். பெற்றோர்- ஆசிரியர் கழகத் தலைவர் காளியப்பன் மற்றும் மாவட்ட பசுமைப் படை ஒருங்கிணைப்பாளர் மற்றும் நாமக்கல் பசுமை முதன்மையாளர் விருது - 2022 பெற்ற ரகுநாத் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நட்டு சிறப்பித்தனர். நிகழ்வில் பெற்றோர் - ஆசிரியர் கழக உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மரக்கன்று கள் நட்டனர். மரக்கன்றுகளை நாமக்கல் கிழக்கு மாவட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவு மாவட்ட தலைவர் நித்யா ரகுநாத் அன்பளிப்பாக வழங்கினார். அனைவ ருக்கும் மீண்டும் மஞ்சப்பை திட்ட விழிப்பு ணர்வு ஏற்படுத்த பட்டது. இதில் திரளான பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.