பொள்ளாச்சி, அக்.3- தமிழகத்தில் அக்.2 ஆம் தேதி முதல் 12 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் ஆழியார் அணை, ஆழியார் பூங்கா ஆகிய பகுதிகளில் சுற்றுலா பயணிகள் அதிக அள வில் வர துவங்கியுள்ளனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அணை, பூங்கா, வண்ணத் துப்பூச்சி பூங்கா, கவியருவி உள்ளிட்ட இடங்களுக்கு கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களிலிருந்தும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவது வழக்கம். இந்நிலை யில், பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை மற்றும் அரசு அலுவலகங்களுக்கு ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை ஆகிய விடுமுறை நாட்கள் என்பதால் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர். இதனால் ஆழியாறு பூங்கா மற்றும் கவியருவி பகுதிகளில் நீண்ட நேரம் நீண்ட வரிசையில் சுற்றுலா பயணிகள் நிற்கும் நிலை உள்ளது. இப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட தால், வாகனங்கள் ஊர்ந்து சென்றன. இத னையடுத்து போக்குவரத்து காவலர்கள் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடு பட்டு வருகின்றனர். ஆழியார் பகுதியில் மக்கள் கூட்டம் படையெடுத்த வண்ணம் உள் ளதால், அங்குள்ள வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.