விடுமுறை நாளை உதகையில் கொண்டாடிய சுற்றுலாப் பயணிகள்
உதகை, பிப்.16- ஞாயிறு விடுமுறையை ஒட்டி உதகைக்கு வருகை புரிந்த சுற்றுலாப் பயணிகள், பூங்கா வில் அமைந்துள்ள கண்ணாடி மாளிகை உள்ளிட்டவற்றை கண்டு ரசித்து விடுமுறை நாளை உதகையில் கொண்டாடி மகிழ்ந்த னர். நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள சுற்று லாத் தலங்களை கண்டு ரசிக்க ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிவது வழக் கம். இந்நிலையில், ஞாயிறன்று உதகை யில் அமைந்துள்ள உதகை அரசு தாவரவி யல் பூங்காவிற்கு தமிழகம் மட்டுமல்லாமல் கேரளம், கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங் களைச் சேர்ந்த ஏராளமான சுற்றுலாப் பயணி கள் வருகை புரிந்தனர். இதில் பூங்காவில் அமைந்துள்ள கண்ணாடி மாளிகை, மற்றும் பச்சை பசேல் என காட்சியளிக்கும் புல்வெளி மைதானங்களை கண்டு ரசித்தும் புகைப்ப டங்களை எடுத்து மகிழ்ந்தனர். மேலும், உதகையில் நிலவும் இதமான காலநிலை யில் பூங்காவை கண்டு ரசித்து மகிழ்ந்து வார விடுமுறையை உதகையில் கொண்டாடினர்.
சமையல் வேலைக்கு மாணவர்களை ஈடுபடுத்துவதா?
சேலம், பிப்.16- கெங்கவல்லி அரசுப்பள்ளியில் சமை யல் பணிக்கு மாணவர்களை ஈடுபடுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சேலம் மாவட்டம், கெங்கவல்லி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வரு கின்றனர். கெங்கவல்லி மட்டுமில்லாமல் நடு வலூர், ஒதியத்தூர், கடம்பூர், கூடமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவர்கள் இப்பள்ளியில் படித்து வரு கின்றனர். பள்ளி சார்பில் கடந்த சில நாட்க ளுக்கு முன் பள்ளி வளாகத்தில் ஆண்டு விழா நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதில் மாண வர்களுக்கு மதிய உணவாக தக்காளி சாத மும், முட்டையும் வழங்கப்பட்டது. மணி என்ப வர் சமையல் செய்யும் பணியில் ஈடுபட்டிருந் தார். இந்நிலையில், பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சிலரை சமையல் செய்யும் பணி யில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைர லாகி வருகிறது. கல்வி பயிலும் மாணவர் களை சமையல் செய்யும் பணியில் ஈடு படுத்தப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள் ளது.
பள்ளி இறுதித் தேர்வை எழுத ஆதார் கட்டாயமல்ல
ஈரோடு, பிப்.16- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் முயற்சியால் மாணவன் பள்ளி இறுதித் தேர்வை எழுத ஆதார் கட் டாயமல்ல என உறுதி செய்யப் பட்டது. ஈரோடு மாவட்டம், அந்தியூர் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவருக்கு ஆதார் அவசியம் என பள்ளி நிர்வாகம் வலியுறுத்தியது. குறிப்பாக முகவரியை மாற்றி சமர் பிக்குமாறு கூறியது. சமர்பிக்காத பட்சத்தில் தேர்வு எழுத இய லாது என பள்ளி நிர்வாகம் தெரி வித்தது. மலைவாழ் மக்களான மாணவனும் அவரது பெற்றோரும் ஆதாரில் முகவரி மாற்ற கடந்த பல மாதங்களாக முயன்றும் முகவரி மாற்ற கோரிக்கை நிராகரிக்கப்பட் டுள்ளது. இதனால் மன உளைச் சலுக்கு ஆளானார். இதுகுறித்து மாணவன் மற்றும் மாணவனின் பெற்றோர் மூலம் அந் தியூர் பேரூராட்சி மார்க்சிஸ்ட் கட்சி கவுன்சிலரான கீதாசேகருக்கு தக வல் வந்தது. அவர், தேர்வு எழுது வதற்கு உண்டான அனைத்து உத விகளையும் செய்வதாக உறுதி அளித்தார். இதனையடுத்து, உடன டியாக அந்தியூர் தாலுகாச் செயலா ளர் ஆர்.முருகேசன் மற்றும் ஏ.கே. பழனிசாமி ஆகியோரிடம் உரிய வழிகாட்டுதல்கள் பெற்று ஈரோட் டில் அமைந்துள்ள ஆதார் மையத் தில் முகவரி மாற்ற முயற்சி செய் தது. முடியாமல் போக நேரடியாக மாவட்ட தேர்வுத்துறை அதிகா ரியை மாணவன் மற்றும் தாயாரு டன் சந்தித்து இது குறித்து பேசி னர். அப்போது ஆதார் கட்டாயம் கிடையாது எனக் கூறப்பட்டது. மேலும் இது குறித்து உடனடி யாக சம்பந்தப்பட்ட பள்ளிக்கு அறி வுறுத்தலை வழங்குவதாக உறுதி மொழி அளித்தனர். அத்துடன் மாண வன் நிச்சயமாக தேர்வு எழுத அரசுத் தரப்பில் உறுதி செய்யப்படும் எனத் தெரிவித்து மாணவனின் தகவல் களையும், கவுன்சிலரின் மனுவை யும் பெற்றுக் கொண்டனர். மேலும், இடம்பெயர்ந்த மலை வாழ் பகுதியை சார்ந்த மாணவர் கள் பல்வேறு பள்ளிகளில் இது போலவே இன்னல்களை சந்திக் கின்றனர். அதுகுறித்தும் உரிய நட வடிக்கைகளை மேற்கொள்ள அதி காரியை வலியுறுத்தினார் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கவுன்சிலர் கீதா சேகர். இந்த விசயத்தில் உரிய ஆலோசனைகளை வழங்கிய ப. மாரிமுத்து, ஈரோடு மாவட்ட தமிழ் நாடு அரசு ஊழியர் சங்கத் தலை வர் விஜய்மனோகர் மற்றும் அந்தி யூர் தாலுகா கட்சி நிர்வாகிகள் ஆகி யோருக்கு அந்த மாணவன் மற்றும் பெற்றோர் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.
வெறிநாய் கடித்து 10 பேர் காயம்
தருமபுரி, பிப்.16- அரூர் அருகே 10க்கும் மேற்பட்டடோரை வெறிநாய் கடித்த தில், 5 பேருக்கு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் டுள்ளனர். தருமபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள சக்கிலிப் பட்டி கிராமத்தைச் சேர்ந்த காசிநாதன் என்பவரின் வளர்ப்பு நாய், சனியன்று இரவு அப்பகுதியைச் சேர்ந்த 10க்கும் மேற்பட் டோரை கடித்து குதறியது. இதில், எஸ்.பட்டியைச் சேர்ந்த தீபா (46), உண்ணாமலை (42), பழனிச்சாமி (55), இந்துமதி (35), கல்யாணசுந்தரம் (60) ஆகியோருக்கு காயம் அதிகமாக ஏற் பட்டு, அரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனு மதிக்கப்பட்டுள்ளனர். வெறிநாயை பிடிக்கும் முயற்சியில் ஊராட்சி பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
புதிய திட்டப்பணிகளுக்கு அமைச்சர் அடிக்கல்
நாமக்கல், பிப்.16- ராசிபுரம், எலச்சிபாளையம், மோகனூர் உள்ளிட்ட பகுதிகளில் புதிய பணிகளுக்கு அமைச்சர் மா.மதிவேந்தன் ஞாயிறன்று அடிக்கல் நட்டு, பணிகளை துவக்கி வைத் தார். நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம், எலச்சிபாளையம், கபிலர்மலை, மோகனூர் புதுச்சத்திரம் மற்றும் ராசிபுரம் உள்ளிட்ட ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட பகுதிக ளில் ஞாயிறன்று ரூ.86 லட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணியை துவக்கி வைத்து, ரூ.15.12 கோடி மதிப்பீட்டில் 6 புதிய திட்டப் பணிகளுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் அடிக்கல் நாட்டி னார். இதைத்தொடர்ந்து, ரூ.4.56 கோடி மதிப் பீட்டில் வையப்பமலை சுப்பிரமணியர் திருக் கோவிலுக்கு தார்ச்சாலை அமைக்கும் பணி யினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் ச.உமா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கே. ஆர்.என்.ராஜேஸ்குமார், வி.எஸ்.மாதேஸ்வ ரன், திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈ.ஆர்.ஈஸ்வரன், நகரமைப்பு மண்டல திட்டக் குழு உறுப்பினர் எஸ்.எம்.மதுரா செந்தில், அட்மா குழுத்தலைவர்கள், மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் வெ.முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.