districts

img

தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரப்படுத்த

ஈரோடு, ஜுலை 6- மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி  உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர் களை பணி நிரந்தரம் செய்ய வேண்டு மென சிஐடியு வலியுறுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் தேசிய தூய்மைப் பணியாளர் ஆணைய தலை வர் மா.வெங்கடேசனிடம், சிஐடியு  மாவட்டத் தலைவர் எஸ்.சுப்ரமணியன்  அளித்த மனுவில் தெரிவித்திருப்பதா வது, ஈரோடு மாநகராட்சி, 4 நகராட் சிகள், 42 பேரூராட்சிகள் மற்றும் 14 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 225 கிராம ஊராட்சிகளில் முறையே 400, 300,  500 என சுமார் 1200 தூய்மைப் பணியா ளர்கள் மட்டுமே பணி நிரந்தரம் பெற் றுள்ளனர். எஞ்சியவர்கள் பணி நிரந்த ரமின்றி தினக்கூலிகளாக, ஒப்பந்த அடிப்படையில், சுய உதவிக்குழுவின் மூலம் வேலை பெற்று வருகின்றனர். இதேபோல மத்திய, மாநில அரசு அலு வலகங்கள், பொதுத்துறை நிறுவனங் கள், வர்த்தக நிறுவனங்கள், அரசு மற் றும் தனியார் மருத்துவமனைகள், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை யிலும் இதே நிலை உள்ளது. இவர்கள்  பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. குறைந்தபட்ச ஊதிய சட்டப்படியும் ஊதி யம் வழங்கப்படுவதில்லை. சுமார் 5 லட் சத்திற்கும் மேற்பட்ட மக்கள் மாநக ராட்சியில் வசிக்கின்றனர். ஏராளமான குடியிருப்புகளும், வர்த்தக நிறுவனங்க ளும் பல்கிப் பெருகி உள்ளது. இவற் றிற்கு ஏற்ப தூய்மைப் பணியாளர்  இல்லை. பல நகராட்சி, பேரூ ராட்சி, ஊராட்சிகளிலும் இதே நிலை தான் உள்ளது. நாள் முழுவதும் பணி யாற்றினாலும் அவர்களை பகுதிநேர  ஊழியர்கள் என்றே வகைப்படுத்து கின்றனர். காலமுறை ஊதியம் பெறும் தொழி லாளர்கள் ரூ.60ஆயிரம் வரை ஊதியம்  பெறுகின்றனர். பணி நிரந்தரப்படுத்தப் படாத தொழிலாளர்களுக்கு ரூ.724, 320, 530 என்ற தினக்கூலியே வழங்கப்படுகி றது. எனவே, இவர்களைப் பணி நிரந்த ரம் செய்து பணிப்பயன்கள் வழங்க வேண்டும். மேலும், குடியிருப்பு, வீடு,  சீருடை, மருத்துவம் உள்ளிட்ட வசதிகள்  அளிக்க வேண்டும். இதனை நிறை வேற்ற உத்தரவாதப்படுத்த வேண்டும் என மனு அளித்தனர்.