ஈரோடு, அக். 5- கொடி காத்த குமரனின் 119 ஆவது பிறந்த நாளை ஈரோடு சென்னி மலையில் வாலிபர் சங்கத்தினர் எழுச்சி கரமாக கொண்டாடினர். இந்திய விடுதலைப் போராட் டத்தில் பங்கேற்று, குண்டாந்தடிகள் தாக்கியபோதும் கைகளில் இறுக்கப் பிடித்த மூவர்ணக்கொடியை தாள விடாமல் உயிர் துறந்தவர் திருப்பூர் குமரன். இளைஞர்களின் ஆதர்ச நாயக னான திருப்பூர் குமரன் ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் பிறந் தவர். சென்னிமலையில் அமைந்துள்ள திருப்பூர் குமரனின் சிலைக்கு 119 ஆவது பிறந்த தினத்தில், இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தினர் மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத் தினர். இதில், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் வி.ஏ.விஸ்வநாதன், மாணவர் சங்க மாவட்டதலைவர் டி. நவீன், சென்னிமலை செயலாளர் சுபாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதேபோல சிவகிரியில் உள்ள குமரனின் முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப் பட்டது. இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப் பினர் சி.முருகேசன், மொடக்குறிச்சி-கொடுமுடி இடைக்கமிட்டி செயலாளர் கே.பி.கனகவேல், வாலிபர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் லோகநாதன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். திருப்பூர் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் மூவர்ணக் கொடி காத்த திருப்பூர் தியாகி குமரன் 119 ஆவது பிறந்தநாள் செவ்வாயன்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்க வடக்கு நகர கமிட்டி சார்பில் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத் தப்பட்டது. இந்த நிகழ்வில் வடக்கு மாநகர கமிட்டி தலைவர் எஸ்.கண்ணன், மாநகரச் செயலாளர் எஸ்.விவேக், மாவட்ட குழு உறுப்பினர் பிரவீன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.