districts

img

திமுக – விசிக கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை தொல்.திருமாவளவன் பேட்டி

கோயம்புத்தூர், செப். 25- திமுக - விசிக இரு கட்சிகளுக்கு இடையில் எந்த சல சலப்பும் இல்லை எனவும் விரிசலும் உருவாக வாய்ப்பு இல்லை எனவும் கோவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கோவை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், திமுக - விசிக இரு கட்சிகளுக்கு இடையில் எந்த சலசலப்பும் இல்லை, விரிசலும் உருவாவதற்கு வாய்ப்பும் இல்லை. என்னு டைய ஊடக பக்கத்தில் பதிவான சிறிய வீடியோவில் ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்ற கருத்தை விவாதத்திற்கு பலரும் எடுத்துக் கொண்டார்கள். அந்த  விவாதம் மேலும், மேலும் விவாதங்களுக்கு இடம் அளித்திருக்கிறது. இதனால் திமுக, விசிக இடையில் எந்த  சிக்கலும் இல்லை, எந்த சிக்கலும் எழாது என்றார்.