districts

img

100 நாள் வேலை திட்டத்தை நம்பி இருக்கும் குடிமங்கலம் கிராமப்புற ஏழைகள் - என்.சசிகலா

குடிமங்கலம் ஒன்றியத் தில் 23 கிராம ஊராட்சிகளில் 82 கிராமப் பகுதிகள் உள் ளன. இந்த ஒன்றியத்தின் ஒரு பகுதி பிஏபி திட்டம் மூலம் பாசனம் பெறுகிறது. 50 சதவீத நிலங்களில் பருவ மழையை நம்பியே விவசா யம் நடக்கிறது. பிரதான  சாகுபடியாக மக்கா சோள மும், தென்னையும் உள்ளன. ஓன்றியத்தின் மேற்கு பகுதியில் கணிசமாக கொண்டைக் கடலை மானாவாரி பயிராக உள்ளது. விவசாய வேலைகளில் ஆட்கள் கிடைப்பது சிரமம். இப் பகுதி விவசாயிகள் விதை, உரம், மருந்து விலை உயர்வு  காரணமாக ஒவ்வொரு ஆண்டும் நஷ்டத்தை சந்தித்து வருகி றார்கள். இதனால் விவசாயத்தின் சார்பு தொழிலான பால் உற்பத்தியில் பெரும்பாலானவர்கள் ஈடுபட்டுள்ளனர். தேங்காய் மட்டையில் இருந்து கயிறு திரித்தல், கோழிப்  பண்ணைகள்,  பனியன் தொழில்கள் அதிகரித்து வருகிறது.  இவற்றில் வட மாநில தொழிலாளர்கள் அதிக எண்ணிக்கை யில் வேலை செய்கின்றனர். குடிமங்கலம் ஒன்றியத்தில் மட் டும் 400 மெகாவாட் மின் உற்பத்தி காற்றாலைகள் மூலம்  நடைபெறுகிறது.  சிறிய நூற்பாலைகள் 15க்கும் மேல் இயங்கி வருகிறது. அதில் வேலை செய்பவர்கள் கணிசமாக புலம் பெயர்ந்த வெளி மாநிலத் தொழிலாளர்கள் மற்றும்  பெண்கள் தான்.  கட்டுமானம், பனியன் சார்பு தொழில்கள்,  தேங்காய் உரிப்பு போன்ற வேலைகளுக்கு வெளியூர்  சென்று திரும்பும் தொழிலாளர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். விவசாய வேலையை நம்பி வாழ்ந்த திறன் குறைந்த தொழிலாளர்களுக்கு 100 நாள் வேலைத் திட்டம்  மட்டுமே வருமானம் தரும் பாதுகாப்பு அம்சமாக உள் ளது.

கோரிக்கைகள்

ஒன்றிய பகுதிகளில், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத் தொழிலாளர்களை அனைத்து விவசாய வேலை களுக்கும் பயன்படுத்த திட்டமிட வேண்டும். ஒன்றியத்தின் அனைத்து பகுதிகளுக்கும் திருமூர்த்தி மலை கூட்டு குடிநீர்  திட்டத்தில் சீராக குடிநீர் விநியோகிக்க வேண்டும்.  அனைத்து  கிராமப்புற மயானங்களை தூய்மை செய்து சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும். பெதப்பம்பட்டி, குடிமங்கலம் பகுதி களில் போக்குவரத்து காவலர் நியமித்து போக்குவரத்து நெருக்கடியை ஒழுங்குபடுத்த வேண்டும், பிஏபி பாச னத்தில் தண்ணீர் திருட்டை தடுத்து உரிய நடவடிக்கை எடுக்க  வேண்டும்.  ஒன்றியத்தில் வீடு இல்லாதோர்க்கு இலவச  வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும், பெதப்பம்பட்டியில் புறக்காவல் நிலையம் அமைப்பது. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை சுத்தப்படுத்துவது ஆகிய பணிகளை மேற் கொள்ள வேண்டும்.

;