districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை ரத்து செய்யும் வரை  மின் கட்டணத்தை செலுத்த மாட்டோம்

விசைத்தறியாளர் கூட்டமைப்பு

ஈரோடு, செப்.17- மின் கட்டண உயா்வை ரத்து செய்யும் வரை விசைத் தறியாளா்கள் மின் கட்ட ணத்தை செலுத்த மாட்டோம் என தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பின் ஆலோ சனை கூட்டத்திற்கு பின்  தலைவர் எல்.கே.எம். சுரேஷ், செய்தியாளர்க ளுக்கு அளித்த பேட்டி: தமிழ கத்தில் 1.41 லட்சம் மின்  இணைப்புகளின் கீழ் மொத்தம் 6 லட்சம் விசைத் தறிகள் இயங்கி வரு கின்றன. இந்தத் தொழிலில்  நேரடியாக 10 லட்சம் தொழி லாளா்கள் ஈடுபட்டுள்ளனர். தொழில் சார்ந்து 10 லட்சம் தொழிலாளா்கள் உள்ளனர். இவ்வாறு நேரடியாகவும், மறைமுகமாகவும் 1 கோடி மக்களின் வாழ்வாதாரமாக விசைத்தறி தொழில் உள்ளது. 6 லட்சம் தறிகளில் தினமும் 5 கோடி மீட்டா் துணி  உற்பத்தியாகிறது. இதன் மதிப்பு ரூ.150 கோடி. இத னால் தினமும் ரூ.7.5 கோடி  அளவுக்கு ஜிஎஸ்டி செலுத் துகிறோம். தவிர விசைத் தறி சார்ந்த பிற தொழில் கள் மூலம் மொத்தமாக தினமும் ரூ.20 கோடி அளவுக்கு ஜிஎஸ்டி வாயி லாக அரசுக்கு வருவாய் கிடைக்கிறது.  கடந்த (கருணாநிதி, ஜெயலலிதா) ஆட்சிக் காலங்களில் விசைத்தறி தொழில் மேம்பாட்டுக்கு பல் வேறு திட்டங்கள் அறிவிக் கப்பட்டது. இதனால்  தொழில் வளா்ச்சிய டைந்தது. இப்போது மின்  கட்டண உயா்வால் விசைத் தறி தொழில் முடங்கிவிடும்  சூழ்நிலை உருவாகி யுள்ளது. எனவே, மின்  கட்டண உயா்வை அரசு உடனடியாக திரும்பப் பெற  வேண்டும்.  மேலும், மின் கட்டண உயா்வை ரத்து செய்யும் வரை விசைத்தறியாளா்கள் மின் கட்டணத்தை செலுத்து வதில்லை என முடிவு செய் துள்ளோம். மேலும் சிறு,  குறு தொழில் நிறுவனங் களுடன் இணைந்து உற் பத்தி நிறுத்தப் போராட் டத்தில் ஈடுபட திட்டமிட் டுள்ளோம். அத்துடன் முதல்வரையும், மின் துறை  அமைச்சரையும் நேரில்  சந்தித்து மின் கட்டண உயர்வால் விசைத்தறி தொழிலுக்கு ஏற்படும்  பாதிப்புகள் குறித்து முறை யிட திட்டமிட்டுள்ளோம் என்று தெரிவித்தார்.

ஆ.ராசா மீது சாதிய வன்மத்துடன் முகநூல் பதிவு:  கைது செய்யப்படுவாரா அதிமுக நிர்வாகி?

அவிநாசி, செப். 17 – நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவைப் பற்றி சாதிய வன்மத்துடன், உள்நோக்கம் கொண்டு சமூக வலை தளத்தில் பதிவிட்டிருக்கும் அதிமுகவைச் சேர்ந்த அவிநாசி  மேற்கு அண்ணா தொழிற்சங்க செயலாளர் செந்தில்கு மாரை காவல் துறையினர் கைது செய்ய வேண்டும் என்று  பொது நல அமைப்பினர் வற்புறுத்தி உள்ளனர். நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக துணைப் பொதுச் செயலாளருமான ஆ.ராசா, மனிதர்களை வர்ண  அடிப்படையில் இழிவுபடுத்தும் மனு தர்மம் குறித்து விமர் சித்திருந்தார். ஆனால் அவர் இந்து மதத்தை இழிவுப டுத்தியதாக இந்துத்துவ கும்பல் எதிர்ப்பை தெரிவித்து வரு கிறது. அதேபோல் பாஜகவின் அடிமைகளைப் போல் செயல் படும் அதிமுகவினரும் இது குறித்து கூக்குரல் எழுப்பி வருகின் றனர். இந்நிலையில் அவிநாசி மேற்கு அண்ணா தொழிற்சங்க  செயலாளர் செந்தில்குமார் என்பவர் தனது முகநூல் பக்கத் தில், ஆ.ராசா பற்றி தரக்குறைவான வார்த்தைகளில் உள் நோக்கத்துடனும், சாதிய வன்மத்துடனும் பதிவிட்டு அவரது  படத்தின் கீழ் கண்ணீர் அஞ்சலி என பதிவேற்றம் செய்துள் ளார். இது குறித்து திமுக மற்றும் பல்வேறு முற்போக்கு அமைப்பினர் கூறுகையில், நாடாளுமன்ற உறுப்பினர் மீது  வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கத் தக்க  விதத்தில் செந்தில்குமார் பதிவு உள்ளது. எனவே அவர் மீது  காவல் துறையினர் சட்டப்படி கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர். திருப்பூர் மாவட்ட காவல்  துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத் தினர். சில மாதங்களுக்கு முன்பு அதிமுகவை சேர்ந்த ஊராட்சி  மன்ற தலைவர் சரவணகுமார், திருமாவளவனை தவ றாக சித்தரித்து பதிவேற்றம் செய்ததற்கு விடுதலை சிறுத்தை  கட்சியினர் அவிநாசி காவல் நிலையத்தில் புகார் தெரிவித் ததை தொடர்ந்து வழக்கு பதிவு செய்து அவரை சிறையில்  அடைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பேருந்தில் பெண் அவமதிப்பு: புகார்

திருப்பூர், செப். 17- பழனியில் இருந்து திருப்பூர் வந்த அரசு  பேருந்தில், முன் பக்க இருக்கையில் அமர்ந்த  பெண் பயணிகளிடம் அந்த பேருந்தின் ஓட்டு நர், நடத்துநர் தவறாக பேசி இழிவுபடுத்தி உள்ளனர். அந்த பணியாளர்கள் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாதிக்கப் பட்ட பெண்ணின் தரப்பில் வலியுறுத்தினர். சனிக்கிழமை மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் பா.லட்சுமி, கட்டு மானத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலா ளர் ஏ.ராஜன், தாலுகா செயலாளர் ரமேஷ், மாதர் சங்கத்தின் தெற்கு ஒன்றியச் செய லாளர் எஸ்.ஜானகி, வாலிபர் சங்க தெற்கு மாநகரக்குழு உறுப்பினர் த.ரங்கநாதன் ஆகி யோர் திருப்பூர் மண்டல வணிக மேலாளர்  ஜெகதீசன் மற்றும் மண்டல மேலாளர் (தொழில்நுட்ப  பிரிவு) யுவராஜ் ஆகியோரை  நேரில் சந்தித்து இதுகுறித்து கோரிக்கை மனு  அளித்தனர்.

அரசுப்பள்ளியில் தனியார் சங்கமா? சிபிஎம்   கண்டனம்

திருப்பூர், செப். 17 - உடுமலைப்பேட்டை மலையாண்டிபட்டினத்தில் அரசுப் பள்ளி கட்டிடத்தில் தனியார் சங்க அலுவலகம் நடத்துவதற்கு மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித் துள்ளது. இது தொடர்பாக மார்க் சிஸ்ட் கட்சியின் உடுமலை  ஒன்றியச் செயலாளர் கி. கனகராஜ் கூறியிருப்ப தாவது: உடுமலைப்பேட்டை மலையாண்டிபட்டினத்தில் பழைய பள்ளிக் கட்டிடப் பகு தியில் ஆரம்பப் பள்ளியும், அங்கன்வாடியும் செயல் பட்டு வருகிறது.  இந்நிலையில் மலை யாண்டிபட்டினம் ஆரம்பப் பள்ளிக்கு சொந்தமான கட்டி டத்தில் தனியார் சங்கம் அலு வலகமாக செயல்பட்டு வரு வது தெரியவருகிறது. எந்த  உத்தரவின் அடிப்படையில் தனியார் சங்கம் அரசுப் பள்ளி கட்டிடத்தில் குழந் தைகள் நடமாடும் அங்கன் வாடி அருகில் செயல்பட அனுமதித்திருக்கிறார்கள் என தெரியவில்லை. கடந்த  8 மாதங்களாக சட்டவிரோ தமான இந்த அனுமதி வட் டார, மாவட்ட கல்வி அதி காரிகள், பள்ளிக்கல்வித் துறையின் அனுமதியுடன் தான் நடக்கிறதா அல்லது அர சியல் தலையீடுகளால் நடக் கிறதா என்பதை உடுமலை ஊராட்சி ஒன்றியமும், பள் ளிக் கல்வித் துறையும் தெளி வுபடுத்த வேண்டும். உடன டியாக அரசு சொத்தான பள் ளிக் கட்டிடத்தை மீட்டிட  வேண்டும்.

திசை திருப்பல் முயற்சி: சிபிஎம்

அவிநாசி,செப்.17 பொருளாதாரப் பின்ன டைவை மறைப்பதற்கே இந்துத்துவ அமைப்புகள் மதவாத அரசியலைத் தூண் டிவிடுகின்றன என்று மார்க் சிஸ்ட் கட்சியின் மாவட்டச்  செயலாளர் செ.முத்துக்கண் ணன் கூறினார்.  திருமுருகன்பூண்டியில் நடைபெற்ற செய்தியாளர்  சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கை யில் அவர் கூறியதாவது: தமிழ்நாட்டு மக்களின் வாழ் வாதாரம், வேலையின்மை பாதிப்பு பற்றி பேசுவதற்கு மாறாக, ஆ ராசா பேசியதை கையில் எடுத்து அரசியல் செய்வது திட்டமிட்ட ஏற் பாடு. அதனால் தான் தந்தை  பெரியார் பெயரில் உணவ கம் வைத்த காரணமாக, அதனை போய் அடித்து உடைக்கிறார்கள். தந்தை பெரியார் என்பவர் தமிழ் நாட்டினுடைய அடையா ளங்களில் ஒருவர். ஆ.ராசா உள்ளரங்கு கூட்டத்தில் குறிப்பிட்ட தலைப்பில் பேசு வதை எடுத்துக் கொண்டு, மனுஸ்மிருதியில் சொல்லி இருப்பதைப் பேசி உள் ளார். பொதுவெளியில் யாரையும், எவரையும் பேச வில்லை, அந்தப் பிரச்சி னையை கையில் எடுப்பது  என்பது ஒட்டுமொத்த பொரு ளாதார பிரச்சனையை மறைக்கச் செய்யவே. நீல கிரி நாடாளுமன்றத் தொகுதி யில் இந்துத்துவ அமைப்பி னர் கடை அடைப்பு அறி விப்பு  தேவையற்ற செயல், என்றார்.

ஏரியின் கால்வாயில் திடீர் உடைப்பு விளைநிலத்தில் புகுந்த வெள்ளம்

சேலம், செப்.17- வெள்ளாளபுரம் ஏரியின் கால்வாயில் திடீர் உடைப்பு ஏற்பட்டது. இதனால், விளைநிலத்தில் புகுந்த தண்ணீரால் பயிர்கள் பாதிக்கப்பட்டது. சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தொடர்ச்சியாக கனமழை கொட்டி தீர்த்தது. சேர்வராயன் மலைத்தொடரில் உள்ள ஏற்காடு மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் பெய்த கனமழையால் அங்கிருந்து உருவாகி வரும் சரபங்கா நதியில் தொடர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தற்போது வரை வெள்ளப்பெருக்கு நீடித்து வருகிறது. இதனால் சரபங்கா நதியின் வடிநிலப்பகுதியில் கொங்கணாபுரம் அருகே உள்ள வெள்ளாளபுரம் ஏரி தனது முழு கொள்ளளவை எட்டியது. ஏரியிலிருந்து பிரதான கால்வாய்கள் வழியாக அருகில் உள்ள தாதாபுரம் ஈச்சனேரி, ஆசன்குட்டை ஏரிகளுக்கு தண்ணீர் வெளியேற்றப்பட்டு, சென்று கொண்டிருந்தது. இந்நிலையில், வெள்ளாளபுரம் ஏரியின் கால்வாயில் கோணசமுத்திரம் அருகே திடீரென உடைப்பு ஏற்பட்டது. இதனால் கால்வாயில் இருந்து வெளியேறிய தண்ணீர், அருகில் உள்ள விளை நிலங்களில் புகுந்தது. விளை நிலங்களில் தண்ணீர் குளம்போல் தேங்கி நிற்பதால், அதில் பயிரிடப்பட்டுள்ள பருத்தி, சோளம் உள்ளிட்ட பயிர்கள் அழுகி சேதமடையும் நிலை உருவாகி உள்ளது. இதனிடையே கால்வாயில் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் மணல் மூட்டைகளை அடுக்கி தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது. இருந்தபோதிலும், தொடர்ந்து தண்ணீர் வீணாகி வருகிறது. இதனால் மற்ற ஏரிகள் முழுமையாக நிரம்பாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, கால்வாயில் ஏற்பட்ட உடைப்பை உடனடியாக சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்

சேலம், செப்.17- ஓமலூர் அருகே காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரி வித்த நிலையில், திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந் துள்ளனர். சேலம் மாவட்டம், ஓமலூரை அடுத்த கொங்குபட்டி, தொட் டம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் மகன் உதய குமார் (23). இவர் சேலத்தில் ஒரு பிரபல துணிக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். அதேகடையில் வேலை பார்த்து வந்த சேலம் பொன்னம்மாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவர் மகள் தேவதர்ஷினி (19) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், இவர்களது காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியதால், அவர்கள் வீட்டை விட்டு வெளியேறி தாரமங்கலம் விநாயகர் கோவி லில் திருமணம் செய்து கொண்டனர். இதன்பின் அவர்கள் பாதுகாப்பு கேட்டு ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலை யத்தில் தஞ்சம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து காவல் ஆய்வாளர் இந்திரா தலைமையிலான காவலர்கள் 2 பேரின் பெற்றோர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பிறகு உதயகுமாருடன் தேவதர்ஷினியை அனுப்பி வைத்த னர்.