districts

img

ரோஜா பூக்களின் விலை கடும் உயர்வு

கோவை, பிப்.13- காதலர் தினத்தை முன்னிட்டு கோவையில் ஒரு ரோஜாப்பூ ரூ.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.  உலகம் முழுவதும் இன்று (பிப்.14) காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இதில், காதலின் அடையாளமாக  சொல்லப்படுகிற ரோஜா பூக்கள்  கொடுப்பது அன்று முதல் தற்பொழுது வரை தொடர்ந்து வருகிறது.  இந்நிலையில், காதலர் தினத்தை யொட்டி கோவையில் ரோஜா பூக்க ளின் விலை கடுமையாக உயர்ந்துள் ளது. ஒரு பூ ரூ. 40 முதல் 50 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. கோவையில் காதலர் தினத்தை ஒட்டி  ரோஜா பூக்கள் மற்றும் பூங்கொத்துகள் விற்பனை அதிகரித்து உள்ளது. இதுகுறித்து வியாபாரிகள் கூறுகை யில், கோவைக்கு தேவையான ரோஜா  பூக்கள் தமிழகத்தில் ஓசூர் மற்றும் பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விற்பனைக்கு கொண்டு வரப் படுகிறது. காதலர் தினத்தை ஒட்டி உல கம் முழுவதும் ரோஜா பூக்களின் தேவை  இருக்கும். தற்பொழுது நிலவும் கடும்  பனிப்பொழிவு, உள்ளிட்ட காரணங்க ளால் ரோஜா பூக்கள் வரத்து குறைந்  துள்ளது. இதன் காரணமாகவே கோவையில் ரோஜா மலர்களின் விலை அதிகரித்து உள்ளது. 20 ரோஜாக் கள் கொண்ட ஒரு கட்டின் விலை மொத்த விற்பனையில் ரூபாய் 450  வரை விற்பனையாகிறது. சில்லரை விலையில் ஒரு ரோஜாப் பூ ரூபாய் 40  முதல் 50 வரை விற்பனை செய்யப்படு கிறது. இது தவிர ரோஜா பூக்கள் மற்றும்  கொய் மலர்களை கொண்டு செய்யப் படும் பூங்கொத்துகளின் விளையும் அதி கரித்து உள்ளது. இந்த பூங்கொத்து களையும் காதலர்கள் தங்களது துணைக்கு பரிசளிக்க வாங்கி செல் கின்றனர், என்றார்.