districts

உடல் நலம் குன்றியவரை தொட்டில் கட்டி தூக்கி வரும் அவலம்

உடுமலை, ஆக.30- உடுமலை அருகே உள்ள மலை வாழ் மக்கள் குடியிருப்பு பகுதியான ஈசல்திட்டில் உடல் நலம் பாதிக்கப் பட்டவருக்கு சிகிச்சை அளிப்பதற் காக சனியன்று மலைப்பகுதியிலி ருந்து தொட்டில் கட்டி தூக்கி வந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. உடுமலை தாலுகா மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில், 18 மலைவாழ் மக்கள் குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புகளுக்கு செல்ல மலை அடிவார பகுதியி லிருந்து காட்டுப்பகுதியில் உள்ள  ஒற்றை அடி பாதையில் நடந்து தான்  செல்ல வேண்டும். இப்பகுதி மக்கள் தங்களின் அடிப்படை தேவைகளான கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அடிப் படை தேவைகளுக்கு இந்த வழியை நம்பியே உள்ளனர்.  இந்நிலையில், கடந்த வருடம் மலைவாழ் மக்கள் குடியிருப்புக ளுக்கு சாலை அமைத்து தரக்கோரி  தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் தலைமையில், உடுமலை வன அலு வலகத்தின் முன்பு தொடர் காத்தி ருப்புப் போராட்டம் நடத்தினர். மலை  வாழ் மக்களின் தொடர் போராட்டத் தின் விளைவாக திருமூர்த்தி மலைப் பகுதியான குருமலை பகுதிக்கு சாலை அமைப்பது என மாவட்ட ஆட் சியர் தலைமையில் வனக்குழு தீர்மா னம் நிறைவேறியது.  இந்நிலையில், உடுமலை ஜல்லி பட்டி அருகே உள்ள மலைப்பகுதி யான ஈசல்திட்டு பகுதியில் பாப்பாள்  என்பவருக்கு மூச்சு திணறல் ஏற்பட் டது. இதையடுத்து, அவரை உடு மலை அரசு மருத்துவமனைக்கு சிகிச் சைக்காக மலைப்பகுதியில் இருந்து காட்டு வழிப்பாதையில் தொட்டில்  கட்டி சுமந்து வந்தனர். இதுபோன்ற துயரச் சம்பவங்கள் தொடராமல் இருக்க அனைத்து மலைவாழ் குடியி ருப்புகளுக்கும் சாலை அமைத்து, அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் தொடர்ந்து போராட் டங்கள் நடத்தி வருகிறது. மலை அடிவார பகுதியில் மக்கள் பயன் படுத்தும் வகையில் அவசர ஊர்தியுடன் கூடிய மருத்துவமனை அமைக்க வேண்டும் என மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ள னர்.