districts

img

நூற்பாலை தொழிலாளர்கள் உண்ணாவிரதம்

சேலம், ஜன.27- அம்மாபேட்டை கூட்டுறவு நூற்பாலையை சட்ட விரோதமாக மூடியதை கண்டித்தும், சிஐடியு தலைமை யில் தொழிலாளர்கள் உண்ணாவிரத இயக்கத்தில் ஈடு பட்டனர். சேலம் மாவட்டம், அம்மாபேட்டை பகுதியில் சேலம்  கூட்டுறவு நூற்பாலை செயல்பட்டு வந்த நிலையில், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு சட்டவிரோதமாக ஆலை மூடப்பட்டது. நூற்பாலையில் பணிபுரிந்த 252 தொழிலாளர்களுக்கு வேலை மற்றும் சட்ட நலன்களை வழங்க வேண்டும். உயர் நீதிமன்ற உத்தரவின் படி  இழப்பீடு வழங்க வேண்டும். தேர்தல் கால வாக்குறுதி யில் கூறியபடி ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்க  வேண்டும் என வலியுறுத்தி, சிஐடியு தலைமையில் தொழிலாளர்கள் திங்களன்று உண்ணாவிரத இயக் கத்தில் ஈடுபட்டனர். இதில் சிஐடியு மாவட்டத் தலைவர் டி.உதயகுமார், மாவட்ட நிர்வாகி வி.ராமமூர்த்தி, கூட்டு றவு தொழிலாளர் சங்க செயலாளர் மோகன்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.