districts

img

மார்க்சிஸ்ட் கட்சி தொடர் முயற்சி வெற்றி

உடுமலை, அக்.16- உடுமலைபேட்டை ஒன்றியம் மலை யாண்டிபட்டினம் அரசு பள்ளி கட்டி டத்தில் ஒரு பகுதி வாடகைக்கு விடப் பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரி வித்து அந்த கட்டிடத்தை மீட்பதற்கு மார்க்சிஸ்ட் கட்சியினர் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டிருந்தனர். இதன்  விளைவாக தற்போது கட்டிடத்தை  காலி செய்து பள்ளிக்கு ஒப்படைப் பதற்கு ஊராட்சி ஒன்றிய நிர்வாகம்  உத்தரவிட்டுள்ளது. உடுமலைப்பேட்டை ஒன்றியம்,  குரல்குட்டை ஊராட்சி, மலையாண்டி பட்டினம் அரசு ஆரம்பப் பள்ளியில்,  ஒரு பகுதி கட்டிடம் வாடகைக்கு விடப் பட்டிருந்தது. இது குறித்தும், பள்ளி யின் பாதுகாப்பு மற்றும் அருகி லேயே உள்ள அங்கன்வாடியின் குழந் தைகளின் பாதுகாப்பு கருதியும் பள்ளிக் கட்டிடம் பள்ளி பயன்பாட்டுக்கே வழங்க வேண்டும். தனியாருக்கு வாடகைக்கு விட்டிருப்பதை ரத்து செய்து அங்கு பள்ளி நூலகம் அமைத்து செயல்படுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் உடுமலை ஒன்றிய குழு வலியு றுத்தி இருந்தது.

இது குறித்து உடு மலை ஊராட்சி ஒன்றிய ஆணையாள ருக்கும், திருப்பூர் மாவட்ட ஆட்சிய ருக்கும் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் தொடர்ந்து புகார் மனுக்கள் கொடுக்கப் பட்டிருந்தது.  மேலும் குரல்குட்டை ஊராட்சியில் கிராமசபைக் கூட்டத்திலும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குரல்குட்டை கிளை சார்பில் முன்மொழிவு கொடுக் கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. மேலும் மலையாண்டிபட்டினம் பள்ளியில் பெற்றோர், பள்ளி மேலாண் மைக் குழுவிலும் எதிர்ப்பு தெரிவிக்கப் பட்டது.   இந்நிலையில் பள்ளிக் கட்டிடத்தை  வாடகைக்கு விடப்பட்டதை ரத்து  செய்தும், வரும் 30ஆம் தேதிக்குள்  கட்டிடத்தை காலி செய்து பள்ளி நிர்வா கத்திடம் ஒப்படைக்க உத்தர விடப்பட்டுள்ளது. அக்டோபர் 10ஆம் தேதி கடிதம் வழங்கப்பட்டுள்ளது.  மார்க்சிஸ்ட் கட்சியின் தொடர் முயற்சி காரணமாக  உடுமலை ஊராட்சி  ஒன்றிய ஆணையாளர் பள்ளி கட்டி டத்தை பள்ளிக்கு ஒப்படைத்ததற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் உடுமலை ஒன்றியக்குழு வரவேற்பும் நன்றியும் தெரிவித்துள்ளது. மேலும் மீட்கப்பட்ட பள்ளிக் கட்டி டத்தில் மாணவர்கள் பயன்பெறும் வகையில் நூலகம் அமைத்திடவும் உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும்  என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  உடுமலை ஒன்றிய செயலாளர் கி. கனகராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.