மேட்டுப்பாளையம், டிச.21- ஒன்றிய அரசு அனுமதியளித் துள்ளதால் யானைகளுக்கு இடை யூறின்றி கடந்து செல்லும் வகை யில் வனப்பகுதியில் பாலம் அமைக் கும் பணி விரைவில் துவங்கப் படும் என தமிழக பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரி வித்துள்ளார். கோவை மாவட்டம், மேட்டுப் பாளையம் வனச்சரக பகுதியில் நாட்டின் மிக முக்கியமான யானை வழித்தடமான கல்லார் வலசை பாதை அமைந்துள்ளது. தமிழகம் மற்றும் கர்நாடக, கேரள வனப் பகுதிகளை இணைக்கும் இந்த வழித்தடத்தை ஆயிரத்திற்கும் மேற் பட்ட யானைகள் ஆண்டாண்டு காலமாக தங்களது வலசை பாதை யாக பயன்படுத்தி வருகிறது. ஆனால், யானைகள் இடம்பெய ரும் கல்லார் வழித்தடத்தில் மேட் டுப்பாளையம் - உதகை செல்லும் தேசிய நெடுஞ்சாலை குறுக்கிடுவ தால் அவற்றின் இயல்பான சூழல் பாதிக்கப்பட்டு வருகிறது. நாளொன் றுக்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் கடந்து செல்லும் இந்த நெடுஞ்சாலையை யானை கள் கடக்க முயலும்போது யானை - மனித மோதல் உருவாகிறது. இதனை கருத்தில் கொண்டு சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த இம்மலை சாலையை தவிர்த்து விட்டு வாகனங்கள் கடந்து செல்லும் வகையில் கல் லாரில் இருந்து இரண்டாவது கொண்டை ஊசி வளைவு வரை சுமார் 2.4 கிலோ மீட்டர் தொலை விற்கு வனத்தின் மீது உயர்மட்ட பாலம் அமைக்க திட்டமிடப்பட் டது.
தற்போது ஆய்வு பணிக்காக ஒரு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு முதற்கட்ட பணிகள் துவங்கியுள் ளன. இதனை செவ்வாயன்று ஆய்வு செய்யவும், பாலத்திற் கான திட்டப்பணிகள் குறித்து கேட் டறிந்து பார்வையிட தமிழக பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு மற்றும் வனத்துறை அமைச் சர் ராமச்சந்திரன் ஆகியோர் கல் லார் பகுதிக்கு வந்திருந்தனர். இத் திட்டபணிகள் குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், தேசிய நெடுஞ்சாலைத்துறை அதி காரிகள், வனத்துறை அதிகாரி கள் ஆகியோரிடம் அமைச்சர்கள் கேட்டறிந்தனர். இதன்பின் அமைச்சர் எ.வ. வேலு கூறுகையில், யானைகளின் முக்கிய வழித்தடமாக உள்ள கல்லார் பகுதியில் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணிக்காக ஒன்றிய அரசிடம் அனுமதி பெற்று முதற் கட்ட பணிகள் துவக்கப்பட்டுள் ளது. யானைகள் வரும் போது வாகனங்களும், வாகனங்கள் வரும் போது யானைகளும் கடக்க இயலாத சிக்கலான சூழல் நிலவு வதை தடுக்கவே இந்த உயர்மட்ட பாலம் கட்டப்படுகிறது. முழுமை யான திட்ட மதிப்பீடு அறிக்கை கிடைத்தவுடன் பணிகள் விரைந்து துவக்கப்படும். இதற்காக ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரியுடன் தக வல் பரிமாறப்பட்டு வருகிறது. இது மட்டுமல்லாது, கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் வரை யிலான நெடுஞ்சாலை திட்டம் போன்ற திட்டங்களும் விரைவில் துவங்க நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது, என்றார்.