districts

img

சமூக ஒற்றுமையை குலைக்க பாஜக முயற்சி

தாராபுரம், டிச.20-  தாராபுரம் அருகே சமூக ஒற்று மையை குலைக்க பாஜக முற்படுவ தாக குற்றஞ்சாட்டி அப்பகுதி பொது மக்கள் காவல் துறையினருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால், பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே உள்ள மீனாட்சிபுரத்தில் இந்து,  முஸ்லீம் என ஆயிரத்திற்கும் மேற் பட்ட குடும்பத்தினர் ஒற்றுமையாக வசித்து வருகின்றனர். இந்நிலையில், மீனாட்சிபுரம் பேருந்து நிறுத்தம் அருகே பாஜகவினர் கட்சி கொடிகம் பம் நடும் பணியில் ஈடுபட்டனர். அப் போது அப்பகுதி பொதுமக்கள் 200க் கும் மேற்பட்டோர் பாஜகவினர் கொடிக்கம்பத்தை நடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பாஜகவின ருக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், விசாரணை  மேற்கொண்டனர். அப்போது, மீனாட் சிபுரம் பொதுமக்கள் கூறுகையில், தங்கள் பகுதியில் பாஜகவில் ஒரு வர் கூட உறுப்பினராக இல்லை என் றும், அப்படி இருக்கும் பட்சத்தில் வெளி ஊர்களில் இருந்து தங்களது பகுதிக்கு வந்து பாஜகவினர் கொடி கம்பம் நட காரணம் என்ன? என கேள்வி எழுப்பினர். மேலும், ஒற்று மையாக இருந்து வரும் மக்களின் சமூக ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் பாஜகவினர் கொடிக் கம்பம் நட முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டினர்.  இதையடுத்து காவல் துறையி னர் அப்பகுதியில் பாஜகவின் கொடிக் கம்பம் நடுவதை தற்காலிகமாக ஒத்தி வைத்தனர். இச்சம்பவத்தால் மீனாட்சிபுரம் - கரூர் சாலையில் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டது.

;