districts

img

சாலை விபத்தில் சிக்கியவரை மீட்ட ஆட்சியர் குணமடைந்தபின் ஆட்சியருக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி!

நாமக்கல், ஜூன் 1- நாமக்கல் அருகே, சாலை விபத்தில் காயமடைந்து, மாவட்ட ஆட்சியரால் மீட் கப்பட்டு சிகிச்சை பெற்று, பூரண குணமடைந் தவர், ஆட்சியரை நேரில் சந்தித்து நெகிழ்ச்சி யுடன் நன்றி தெரிவித்தார். கடந்த மே 17 ஆம் தேதி, ராசிபுரம் பகுதி யில் ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதற் காக நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா, காரில் சென்றார். காலை 10 மணியளவில், நாமக்கல் - சேலம் மெயின் ரோட்டில் பொம்மைகுட்டைமேடுலட்சுமி திருமண மண்டபம் அருகே அவர் சென்றபோது, அவ்வழியாக டூ வீலரில் சென்ற நாமக்கல் மாவட்டம், செல்லப்பம்பட்டி, மேற்கு பாலப்பட்டியை சதீஷ் (38), என்பவர் சாலை விபத்தில் காயமடைந்து கீழே விழுந்து கிடந்தார். அதைக்கண்ட ஆட்சியர் உமா, தனது காரை நிறுத்தி, காயம்பட்ட சதீஷை  மீட்டு, ஆம்புலன்ஸ்க்காக காத்திராமல், தன் னுடன் வந்த மற்றொரு அரசு வாகனத்தில் ஏற்றி, சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத் துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின்படி அவருக்கு அங்கு உயர் சிகிச்சை அளிக்கப் பட்டது. அவருக்கு தலை மற்றும் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டிருந்ததால், அவர் மேல் சிகிச்சைக்காக கோவையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, 15 நாட்கள் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது பூரண குணமடைந்துள்ளார். இத னைத்தொடர்ந்து, நாமக்கல் ஆட்சியர் அலு வலகத்திற்கு வருகைதந்த சதீஷ், ஆட்சி யரை நேரில் சந்தித்து, தனக்கு தக்க நேரத் தில் உதவி செய்து, உயிரைக் காப்பாற்றிய தற்காக நன்றியை தெரிவித்துக்கொண்டார். இதுகுறித்து சதீஷ் தெரிவித்ததாவது, மாவட்ட ஆட்சியர் உரிய நேரத்தில் உடன டியாக மீட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப் பட்டதன் காரணமாக என்னால் பூரண நலம் பெற முடிந்தது. விபத்து ஏற்பட்ட உடன் குறு கிய காலத்தில் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதே, இன்று நான் உயிர் பிழைத்தற்கு முக்கிய காரணம் ஆகும். எனவே, மாவட்ட ஆட்சியர் செயல் மிகவும் நன்றிக்கு உரியதாகும். எதிர்காலத்தில் எதிர் பாராத விதமாக சாலை விபத்து ஏற்படும் சம யத்தில் நான் விபத்திற்கு உள்ளானவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க கண்டிப்பாக தேவையான முதலுதவிகள் மேற் கொள்வேன். மேலும், விபத்துகளை தடுப்பது குறித்து என்னால் இயன்ற விழிப்புணர்வு பணிகளை கட்டாயம் மேற்கொள்வேன். விபத்திலிருந்து என்னை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த மாவட்ட ஆட்சியர்,பிற அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் மீண்டும் ஒரு முறை எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கி றேன், என்றார்.

;